மருத்துவம் :: மகளிர் நலம்

1. நம் உடலிலுள்ள நான்கு வகை அடிப்படைத் திசுக்கள் யாவை?
1. மேல் படலத்திசு
2. இணைப்புத்திசு
3. தசைத் திசு
4. நரம்புத் திசு
2. மெய்யுறுபுணர்ச்சி என்றால் என்ன?
உடலுறவு கொண்டும் இன்பம் நுகர்தல்.
3. புணர்வின்பம் என்றால் என்ன?
உடலுறவின் பொழுது ஆண் பெண் ஆகிய இருவருக்கு வரும் இன்ப உணர்ச்சி நிலை.
4. விந்தணு என்றால் என்ன?
விந்தணுவில் உள்ள ஆண் அணு. விரையில் விந்தணுக்கள் தோன்றுகின்றன.
5. கருமுட்டை என்றால் என்ன?
சூல் பையில் தோன்றும் பெண் அணு.
6. இனவளமின்மை ஆய்வு என்றால் என்ன?
விந்தில் விந்தணுக்கள் 60 மில்லியனுக்குக் கீழ் இருக்குமானால் இன வளமின்மை என்று பொருள். இயல்பான நிலை விந்தணுக்கள் 300 -500 மில்லியனுக்குக் கீழ் இருக்குமானால் இனவளம் உள்ள இயல்பான நிலை.
7. மலடு என்றால் என்ன?
மணமான ஆணோ பெண்ணோ பிள்ளை பெறும் தன்மை இல்லாதிருத்தல். குறையை மருத்துவ ஆய்வின் மூலம் அறியலாம். யாரோ ஒருவரிடம் குறை இருக்கலாம் .
8. கருவுறுதல் என்றால் என்ன?
ஆண் அணுவும் பெண் அணுவும் சேர்தலே கருவுறுதல்.
9. கருவுறுதல் எங்கு நடைபெறுகிறது?
கருப்பையில் நடைபெறுகிறது.
10. மசக்கை என்றால் என்ன?
கருவுற்ற பெண் 3 ஆம் மாதத்தில் துன்புறும் நிலை. காலையில் மட்டும் இருக்கும். ஆகவே, காலை நோய் என்று பெயர். வாந்தி அடிக்கடி இருக்கும்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகளிர் நலம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பெண், கருவுறுதல், விந்தணுக்கள், நிலை