மருத்துவம் :: மகளிர் நலம்

21. ஆண்களுக்குரிய கருத்தடைக் கருவி யாது?
ஆணுறை.
22. பெண்களுக்குரிய கருத்தடைக் கருவிகள் யாவை?
வளையம், பசை, மாத்திரை.
23. கருத்தடை உண்டாக்கும் இயற்கை வழி யாது?
வீட்டு விலக்கு ஆனபின் முதல் வாரத்தின் கடைசியிலும் இறுதி வாரத்திலும் மெய்யுறுபுணர்ச்சி இருத்தல் நலம்.
24. குடும்பநலத் திட்டம் என்றால் என்ன?
கருத்தடைக் கருவிகளைப் பயன்படுத்திக் கணவனும் மனைவியும் குழந்தை பெறுவதின் அளவைக் குறைத்தல். இரண்டே போதும் என்பது தற்பொழுதுள்ள கருத்து.
25. வீட்டு விலக்கு நிற்றல் என்றால் என்ன?
40 வயதில் பெண்களிடம் வீட்டு விலக்கு ஒய்தல்.
26. வீட்டு விலக்கு சுழற்சி என்றால் என்ன?
பெண்களிடம் 28 நாட்களுக்கு ஒரு முறை நான்கு நாட்கள் குருதிக் கசிவு ஏற்படும் நிகழ்ச்சி.
27. இதிலுள்ள நான்கு நிலைகள் யாவை?
1. விலக்குநிலை
2. பெருகு நிலை
3. விடுபடு நிலை
4. சுரப்பு நிலை.
28. பெரும் போக்கு விலக்கு என்றால் என்ன?
வீட்டு விலக்கின்பொழுது உண்டாகும் அதிகக் குருதிக் கசிவு.
29. கங்காரு தாய் என்றால் என்ன?
1990 களில் டாக்டர் கெராட் ரேசனாப்ரியா என்பவரால் கங்காரு நடத்தை அடிப்படையில் உருவாக்கப் பட்ட அடையளிக்கும் துணுக்கம். பிறந்த குழந்தைகளைக் காக்க உதவுவது.
30. கேள் - துலங்கல் தொட்டில் என்றால் என்ன?
கைப்பெட்டி போன்ற கருவியமைப்பு. பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனை ஆராய்ந்தறிவது. பேரா. சாம் டக்கரி முதலியோர் இதை வடிவமைத்தவர்கள். (1995)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகளிர் நலம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், விலக்கு, வீட்டு, நிலை, கருத்தடைக்