மருத்துவம் :: மகளிர் நலம்

11. மனிதக் கருவளர் காலம் எத்தனை நாட்கள்?
266 நாட்கள்.
12. ஆண்மையின்மை என்றால் என்ன?
புணர்ச்சி இன்பங்கொள்ள விருப்பமின்மை அல்லது ஆற்றலின்மை.
13. புணர்வழித் தைப்பு என்றால் என்ன?
கிழிந்த புணர்வழியைச் சரி செய்ய நடைபெறும் அறுவை.
14. இதன் வகைகள் யாவை?
1. முன் புணர்வழித் தைப்பு
2. பின் புணர்வழித் தைப்பு
15. பெலோப்பியன் குழாய் என்றால் என்ன?
இத்தாலிய உடற் கூறியலார் சேப்ரியல் பெலோப்பியன் (1523-62) என்பவர் பெயரால் அமைந்தது. 7.5 செ.மீ. நீளமுள்ளது. சூல்பையிலிருந்து கருப்பைக்குள் செல்வது.
16. குழாய்த் துணுக்கம் யாருக்குச் செய்யப்படுகிறது?
கருத்தடை உண்டாக்கப் பெண்களிடம் செய்யப்படு கிறது. பெலோப்பியன் குழல் துண்டிக்கப்படும். இதனால் முட்டை கருப்பைக்குச் செல்லாது.
17. சீம்பால் என்பது என்ன?
கருவுற்ற இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின் முலையிலிருந்து வரும் பால் போன்ற நீர். உண்மைப்பாலுக்கு முந்தி வருவது இது.
18. விந்து குழல் துணுக்கம் என்றால் என்ன?
ஒவ்வொரு விந்துகுழலின் பகுதியை நீக்குதல். இதனால் விந்து நீரில் விந்தணு சேர்வது தடுக்கப்படும். கருத்தடைக்கு ஆண்கள் செய்து கொள்வது.
19. கருச்சிதைவு என்றால் என்ன?
கருப்பையிலிருந்து கரு முதிராமல் முன்னரே வெளியேறுதல். இது இயற்கைக் கருச்சிதைவு, செயற்கைக் கருச்சிதைவு என இருவகை.
20. பிறப்புக் கட்டுப்பாடு என்றால் என்ன?
கருத்தடைக் கருவிகள் மூலம் இனப்பெருக்கத்ததைக் கட்டுப்படுத்தல். இதனால் பிறப்பு வீதம் குறையும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகளிர் நலம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கருச்சிதைவு, இதனால், தைப்பு, புணர்வழித், பெலோப்பியன்