மருத்துவம் :: மகளிர் நலம்
31. செயற்கை விந்தேற்றம் என்றால் என்ன?
செயற்கையாக விந்தை எடுத்துப் புணர்வழியாகச் செலுத்துதல்.
32. ஆய்வுக் குழாய்க் குழந்தை என்றால் என்ன?
ஆய்வகத்தில் முட்டை கருவுறச் செய்யப்பட்டுக் கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. இதிலிருந்து வளர்வதே பிறக்கும் குழந்தை 1991 இல் வெற்றி தரும் வகையில் இந்த ஆய்வு நடந்தது.
33. ஆய்வுக் குழாய்க் குழந்தைக் கூட்டம் எப்பொழுது எங்கு நடைபெற்றது?
இம்முதல் கூட்டம் 27-4-97 அன்று ஜெய்பூரில் நடை பெற்றது. ஜெய்ப்பூர் இனவள மையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
34. இதன் நோக்கம் யாது?
ஆய்வுக் குழந்தைத் தொழில் நுட்பம் பற்றிய அச்சம், தவறான கருத்து ஆகியவற்றைப் போக்குவது. 125 ஆய்வுக் குழாய்க் குழந்தைகள் உருவாக்கப் பட்டதற்காகவும், மையம் 8 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவும் இது நடைபெற்றது.
35. ஒத்த இரட்டையர்கள் என்றால் என்ன?
ஒரே கருவணுவிலிருந்து தோன்றி ஒன்றை மற்றொன்று ஒத்திருக்கும். இது தனி உயிரிகள். எ-டு ஆர்காட் சகோதரர்கள். டாக்டர் இராமசாமி, டாக்டர் இலட்சுமணசாமி.
36. சியாமிய இரட்டையர்கள் என்றால் என்ன?
ஒரு தனி உயிரணுவிலிருந்து உண்டாகிய இரு தனி உயிர்கள். பிறப்பிலிருந்து ஒரு தசைக் கயிற்றினால் பிணைக்கப்ட்டிருக்கும். இச்சீன இரட்டையர் காலம் (1811-1874). இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பெயர் வழங்குவது நடைமுறையில் உள்ளது.
37. குழந்தை வரும் நிலை என்றால் என்ன?
இடுப்புக் பகுதியில் குழந்தையின் பகுதியான தலை முன் வருதல்.
38. தொப்பூழ்க் குழி என்றால் என்ன?
கருவோடு சேர்ந்த கொடி இணையும் பகுதி.
39. நச்சுக்கொடி என்றால் என்ன?
சூல்கொடி வளரும் கருவைக் கருப்பையோடு இணைத்து ஊட்டம் வழங்குவது.
40. குழந்தை நிலை என்றால் என்ன?
முதியவரிடம் குழந்தை இயல்புகள் குடி கொண்டிருத்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகளிர் நலம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, குழந்தை, ஆய்வுக், குழாய்க்