மருத்துவம் :: மருத்துவ நோபல் பரிசுகள்
51. இளம்பிள்ளை வாத நச்சுயிரிகளின் வளர்ச்சித் திறனைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1954 இல் ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், தாமஸ் ஹக்கிள் வெப்லர், பிரடடெரிக் சாப்மன் ஆகிய மூவரும் பெற்றனர்.
52. ஆக்ஸிஜன் ஏற்ற நொதிகளின் வினை ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1955இல் ஆக்சல் ஹயுகோ தியோடர் தியோரெல் பெற்றார்.
53. குருதி ஒட்ட மண்டலத்தில் ஏற்படும் நோய் நிலைமைகள், இதயச் செருகல் ஆகியவை குறித்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1956 இல் ஆண்ட்ரி பிரடெரிக் கோர்னண்ட், வெர்னர் பார்ஸ்மன், டிக்கிசன் டபுள்யு ரிச்சர்ட்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.
54. குருதிக்குழாய் மண்டலம், எலும்புத் தசைகள் ஆகியவற்றில் செயற்கைக் கூட்டுப்பொருள்களின் வினைத் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1957 இல் டேனியல் போவெட் பெற்றார்.
55. சில திட்டமான நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி மரபணுக்கள் செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1958 இல் ஜார்ஜ் வெல்ஸ் பீடில், எட்வர்டு லாரி டேடம் ஆகிய இருவரும் பெற்றனர்.
56. மரபணு மீள் கூடுகைக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1958 இல் ஜோஷ்வா எலடல்பெர்க் பெற்றார்.
57. ஆர்என்ஏ, டிஎன்ஏ ஆகியவற்றின் உயிரியல் தொகுப்பிலுள்ள நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1959 இல் செவரோ ஒக்கோயா, ஆர்தர் மெடாவர் ஆகிய இருவரும் பெற்றனர்.
58. ஈட்டிய தடுப்பாற்றல் பொறுக்குந்திறன் பற்றிக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1960 இல் சர் பிராங் மேக்பார்லேன் பர்னட் சர் பீட்டர் பிரியன் மெடாவர் ஆகிய இருவரும் பெற்றனர்.
59. காதுநத்தை எலும்பின் தூண்டுதல் பொறிநுட்பத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1961 இல் ஜார்ஜ் வான் பெகசி பெற்றார்.
60. உட்கரு அமிலங்களின் மூலக்கூறு அமைப்பு, அவற்றின் செய்தி அனுப்பும் சிறப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1962 இல் பிரான்சிஸ் ஹேரி காப்டன் கிரிக், ஜேன்ஸ் டுயி வாட்சன், உரமெளரைஸ் ஹயுஜ் பிரெடரிக் வில்கின்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருத்துவ நோபல் பரிசுகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றவர், பெற்றனர், ஆகிய, பெற்றார், கண்டுபிடிப்பிற்காக, இருவரும், கண்டுபிடித்ததற்காக, மூவரும், பெற்றவர்கள்