மருத்துவம் :: மருத்துவ நோபல் பரிசுகள்
31. கரு வளர்ச்சியின் அமைப்பின் விளைவை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1935 இல் ஹேன்ஸ் ஸ்பெமன் பெற்றார்.
32. நரம்புத் துடிப்புகளின் வேதிச் செலுத்துகைக் குறித்துக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1936 இல் ஹென்றி ஹேலட் டேல், ஆட்டோ லோவி ஆகிய இருவரும் பெற்றனர்.
33. உயிரியல் கனற்சிச் செயல்களுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1937 இல் ஆல்பர்ட் செண்ட் கயார்கைவான் நாகிரோ போல்ட் பெற்றார்.
34. மூச்சு நுட்பம் பற்றி ஆராய்ந்தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1938 இல் கார்னெய்லி ஜீன் பிராங்காய்ஸ் ஹேமன்ஸ் பெற்றார்.
35. புரோன்டிசாலின் நச்சுயிரி எதிர்ப்பு விளைவுகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1939 இல் ஜெர்கார்டு டோமக் பெற்றார்.
36. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1943 இல் ஹென்றி கார்ல் பீட்டர் டேம் பெற்றார்.
37. வைட்டமின் K இன் வேதி இயல்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1943 இல் எட்வர்டு ஆடல்பெர்ட் டாய்சி பெற்றார்.
38. ஒற்றை நரம்பிழைகளின் வேறுபட்ட வேலைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1944 இல் ஜோசப் எர்லாங்கர், ஹெர்பர்ட் ஸ்பென்சர் கேசர் ஆகிய இருவரும் பெற்றனர்.
39. பெனிசிலின் கண்டுபிடிப்பு அதன் நோய்க் குணப்படும் மதிப்பு அறிதல் ஆகியவற்றிற்காக நோபல் பரிசு பெற்ற வர்கள் யார்?
1945 இல் அலெக்சாண்டர் பிளம்மிங், சர் எர்ன்ஸ்ட் போரிஸ் செயின், கோமகன் ஹாவார்டு வால்டர் புளோரி ஆகிய மூவரும் பெற்றனர்.
40. எக்ஸ் கதிர்கள் மூலம் சடுதி மாற்றங்களை உண்டாக்குவதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1946 இல் ஹெர்மன் ஜோசப் முல்லர் பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருத்துவ நோபல் பரிசுகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், யார், பரிசு, பெற்றவர், பெற்றார், கண்டுபிடித்ததற்காக, பெற்றனர், ஆகிய