மருத்துவம் :: மருத்துவ நோபல் பரிசுகள்
41. கிளைகோஜன் வினையூக்கத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1947 இல் கார்ல் பெர்டினாண்ட் கோரி, கெர்டி தெரசா கோரி ஆகிய இருவரும் பெற்றனர்.
42. சர்க்கரை வளர்சிதை மாற்றத்தில் மூளையடிச் சுரப்பியின் முன்பகுதி செய்யும் வேலையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1947 இல் எர்னார்டோ ஆல்பர்டோ களெசே பெற்றார்.
43. பல பூச்சிகளுக்கு எதிராக ஒரு தொடு நச்சாக அமைந்து உயர் விளைவு உண்டாக்கும் DDT பற்றிக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1948 இல் பால் ஹெர்மன் முல்லர் பெற்றார்.
44. நடுமூளை ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1949 இல் வால்டர் ருடால்ப் ஹெஸ் பெற்றார்.
45. சில உளக் கோளாறுகளில் வெள்ளணு நீக்கத்தால் ஏற்படும் பண்டுவ மதிப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1949 இல் அந்தோணி சீடனோ டி அப்ரு பிரய்ரி எகாஸ் மோனிஸ் பெற்றார்.
46. அண்ணிரகச் சுரப்பித் தூண்டிகள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1950 இல் எட்வர்டு சால்வின் கெண்டால், டேடியஸ் ரெய்ஸ்டெயின், பிலிப் ஷோவால்டர் ஹென்க் ஆகிய மூவரும் பெற்றனர்.
47. மஞ்சள் காய்ச்சல் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1951 இல் மாக்ஸ் தெய்லர் பெற்றார்.
48. என்புருக்கி நோய்க்கு எதிராக முதல் உயிரி எதிர்ப்பு மருந்தான ஸ்டெரப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1952 இல் செல்மன் ஆப்பிரகாம் வாக்ஸ்மன் பெற்றார்.
49. நாரத்தைக் காடிச் சுழற்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1953 இல் சர் ஹேன்ஸ் அடால்ப் கிரப்ஸ் பெற்றார்.
50. துணை நொதி A அதன் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1953 இல் பிரிப்ஸ் ஆல்பர்ட் லிப்மன் பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருத்துவ நோபல் பரிசுகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், யார், பரிசு, பெற்றார், பெற்றவர், கண்டுபிடிப்பிற்காக, கண்டுபிடித்ததற்காக