மருத்துவம் :: மருத்துவ நோபல் பரிசுகள்

71. எதிர்ப்புப் பொருள்களின் வேதி அமைப்பை ஆராய்ந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1972இல் ஜெரால்டு எம், டெல்மன் ராட்னி, ஆர் போர்டர் ஆகிய இருவரும் பெற்றனர்.
72. தனிக் கோலங்களையும், சமூகக் கோலங்களையும் ஆராய்ந்து அவை தொடர்பாக நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1973 இல் கர்ல்வான் பிரிஷ், கோன்ராட் லாரன்ஸ், நிக்கோலஸ் டின்பர்ஜன் ஆகிய மூவரும் நோபல் பரிசு பெற்றனர்.
73. கண்ணறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1974 இல் ஆல்பர்ட் கிளாடி, கிறிஸ்டியன் டி டுவி, ஜார்ஜ் இ. பலாடி ஆகிய மூவரும் பெற்றனர்.
74. கண்ணறை மரபுப் பொருளுக்கும் கட்டி நச்சுயிரிகளுக்கும் இடையே நடைபெறும் வினையைக் கண்டுபிடித் தற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1975 இல் டேவிட் பால்டிமோர், ரெனடோ டல்பெக்கோ, வோவர்டு மார்டின், டெமின் ஆகிய மூவரும் பெற்றனர்.
75. தொற்று நோய்கள் தோற்ற நுட்பம் பற்றி ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1976 இல் பரூச் புளும்பெர்க், கார்ல்டன் கெய்டுசிக் ஆகிய இருவரும் பெற்றனர்.
76. மூளையில் பெப்டைடு வளர்தூண்டி குறித்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1977 இல் ரோஜர் கயிலிமன், ஆண்ட்ருவ் வி. சேலி ஆகிய இருவரும் பெற்றனர்.
77. பெப்டைடு வளர்தூண்டியின் கதிர்வீச்சுத் தடுப்பாற்றல் மதிப்பீட்டிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1977 இல் ரோசலின் யாலோ பெற்றார்.
78. வரம்புடைய நொதிகள் பற்றிக் கண்டுபிடித்து அவற்றை மூலக்கூறு மரபியலில் பயன்படுத்தியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1978இல் வெர்னர் ஆர்பர், டேனிலல் நாதன்ஸ், ஹேமில்டன் ஒ. சிமித் ஆகிய மூவரும் பெற்றனர்.
79. கணிப்பொறி வழியமைந்த தள வரைவியலை உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1979இல் ஆலன் எம். கார்மக், சர் காட்பிரே என். ஹவுன்ஸ் பீல்டு ஆகிய இருவரும் பெற்றனர்.
80. கண்ணறை மேற்பரப்பில் மரபு வழி உறுப்புகளை உறுதி செய்து, அவற்றின் தடுப்பாற்றல் வினையைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1980 இல் பரூஜ பெனாசெரப், ஜீன் டாசெட் ஜார்ஜ் டி. ஸ்னெல் ஆகிய இருவரும் பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருத்துவ நோபல் பரிசுகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றனர், ஆகிய, பெற்றவர்கள், இருவரும், மூவரும், கண்ணறை