மருத்துவம் :: இதயம்
1. இதய அமைப்பு
1. இதயம் என்றால் என்ன?
முழுக்க முழுக்கத் தசையால் ஆன உறுப்பு. மார்பில் நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. குருதியை உடல் முழுதும் செலுத்தி மீண்டும் பெறுவது. இதற்கு ஒய்வே இல்லை.
2. தசை இயக்க இதயம் என்றால் என்ன?
நேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப் படும் இதயம். எல்லா முதுகெலும்பு விலங்குகளுக்கும் உண்டு.
3. இதயத்தின் எடை என்ன? வடிவம் என்ன?
சுமார் 300 கிராம். தாமரை மொட்டு வடிவம்.
4. இதயத்தசையின் பண்புகள் யாவை?
1. சந்தம்
2. தூண்டுதிறன்
3. சுருங்குதிறன்
4. கடத்தும் திறன்.
5. இதயக் குருதிக்குழாய்கள் யாவை?
இட இதயத்தமனி, வல இதயத்தமனி.
6. இதயத்திலிருந்து உடலின் பல பகுதிக்கும் குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்கள் யாவை?
தமனிகள்.
7. தமனிகளில் பெரியது எது?
பெருந்தமனி.
8. உடலின் பல பகுதிகளிலிருந்தும் இதயத்திற்குக் குருதியைக் கொண்டுவரும் குழாய்கள் எவை?
சிரைகள்.
9. சிரைகளில் பெரியவை எவை?
மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை.
10. மேற்பெருஞ்சிரையின் வேலை யாது?
உடலின் மேற்பகுதிகளிலிருந்து இதயத்திற்குக் குருதியைக் கொண்டு வருவது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, உடலின், யாவை, இதயம்