மருத்துவம் :: இதயம்

21. இதயச்சுருக்கம் என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் சுருங்கு நிலை. இது இதயக் கீழறைகள் சுருங்குவதையே குறிக்கும்.
22. சுருங்கு குருதியழுத்தம் என்றால் என்ன?
எவ்விசையுடன் இடக்கீழறை சுருங்குகிறதோ அவ்விசை வெளிப்புறத் தமனிகளுக்குச் செல்லுதல்.
23. சுருங்கு முணுமுணுப்பு என்றால் என்ன?
இதயம் சுருங்கும்பொழுது கேட்கப்படும் இரைச்சல். இரு பெருந்தமனிகள் அடைப்பாலும் அல்லது மூவிதழ் திறப்பு அடைப்பாலும் உண்டாவது.
24. இதய விரிவு என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும்.
25. பிஏ இடைநேரம் என்றால் என்ன?
மின் இதய வரைவின் அலகு. இதய மேலறை - கீழறைக் கணுவின்மூலம் நடைபெறும் கடத்தல், முனைச் செயல் நீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இயல்பான நேரம் 0-18 வினாடி.
2. குருதி
26. குருதிஇயல் என்றால் என்ன?
குருதியமைப்பு, தோற்றம், வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயும் மருத்துவத் துறை.
27. குருதிமூலக் கண்ணறைகள் என்றால் என்ன?
சிவப்பு எலும்புச் சோற்றின் முதன்மையான கண்ணறைகள். இங்குக் குருதியணுக்களின் எல்லா வகைகளும் உண்டாகின்றன.
28. குருதி என்பது யாது?
இது ஒரு நீர்மத் திசு. உடலில் ஒடுவது.
29. இதன் அமைப்பு யாது?
நீர் 79%. கண்ணறைகள் 12%, புரதம் 7%, ஏனைய கெட்டிப் பொருள்கள் 2%
30. குருதிக் கண்ணறைகள் யாவை?
சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள், தகட்டணுக்கள், கனிமம் (பிளாஸ்மா) என்பவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கண்ணறைகள், சுருங்கு, குருதி