மருத்துவம் :: இதயம்
61. குருதியழுத்தமானி என்றால் என்ன?
குருதி அழுத்தத்தை அளக்க உதவும் கருவி.
62. இதை அமைத்தவர் யார்?
சாமவால்வான் பாச், 1880இல் அமைத்தார்.
3. இதய அறுவை
63. இதய அறுவை எப்பொழுது தொடங்கியது? செய்தது யார்?
1897ஆம் ஆண்டில் தொடங்கியது. செய்தது ஜெர்மானியரான இலட்விக் ரேன்.
64. அறுவை மருத்துவர் இராபர்ட் கிராஸ் செய்த அருஞ்செயல் யாது?
இவர் அமெரிக்க மருத்துவர். 1930இல் முதன்முதலில் ஒரு குழந்தையின் பெருந்தமனி நுரையீரல்தமனி இணைப்புக்குழல் திறப்பை மூடினார்.
65. இதய அறுவை முறைகள் யாவை?
1. மூடிய இதய அறுவைமுறை.
2. திறந்த இதய அறுவைமுறை.
3. பதியமுறை.
4. செயற்கை இதயமுறை.
66. திறப்பு அறுவையின்பொழுது பயன்படும் எந்திரம் எது?
இதய நுரையீரல் எந்திரம்.
67. இந்த எந்திரத்தின் வேலை யாது?
இது இதயத்தின் வேலையையும் நுரையீரலின் வேலையையும் திறந்த அறுவையின்பொழுது செய்கிறது. ஏனெனில், இதயத்துடிப்பு இவ்வறுவையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
68. திறப்பு இதய அறுவை என்றால் என்ன?
இதய நோயாளியின் வலமார்பு கீறித் திறக்கப்படும். துரையீரல் ஒதுக்கப்படும். இதய வெளியுறை திறக்கப் பட்டு இதயம் எட்டப்படும்.
69. இவ்வறுவையில் செய்யப்படுவன யாவை?
1. இதய மேலறை இடைச்சுவர்த்துளை அடைப்பு.
2. இதயக்கீழறை இடைச்சுவர்த்துளை அடைப்பு.
3. இதயத்திறப்பிகளைச் சரிசெய்தல்.
70. மூடிய இதய அறுவை என்றால் என்ன?
இதில் மயக்க மருந்து கொடுக்கப்படும். இடது மார்பு கீறப்பட்டுத் திறக்கப்படும். நுரையீரல் ஒதுக்கப்படும். இறுதியாக இதயவெளி உறையைத் திறந்து, இதயம் எட்டப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அறுவை, என்ன, என்றால்