மருத்துவம் :: இதயம்
11. கீழ்ப்பெருஞ்சிரையின் வேலை என்ன?
உடலின் கீழ்ப்பகுதிகளிலிருந்து குருதியைக் கொண்டு வருவது.
12. ஓர் குருதிக்குழாய் தமனியா சிரையா என்று எப்படி கண்டறிவாய்?
குருதி துள்ளித் துள்ளி வந்தால் தமனி: ஒரே சீராக வந்தால் சிரை.
13. தமனியில் திறப்பிகள் இல்லை; சிரையில் உண்டு. ஏன்?
தமனியில் அழுத்தம் அதிகம். ஆகவே திறப்பிகள் இல்லை. சிரையில் அழுத்தம் குறைவு. ஆகவே, திறப்பிகள் உண்டு.
14. தமனிகளையும் சிரைகளையும் இணைக்கும் நுண்ணிய குழாய்கள் யாவை?
தந்துகிகள்.
15. இதயத்தின் அறைகள் யாவை?
1. மேலறை : இட மேலறை, வல மேலறை.
2. கீழறை : இடக்கீழறை, வலக்கீழறை.
16. ஈரிதழ்த் திறப்பி என்றால் என்ன?
ஈரிதழ்த்திறப்பி, இட மேலறைக்கும் இட கீழறைக்கும் நடுவே அமைந்து, கீழறைக்குக் குருதியைச் செலுத்துவது. கீழறை சுருங்கும் பொழுது இது மூடிக் கொள்ளும். குருதி பெருந் தமனிக்குச் செல்லும்.
17. மூவிதழ்த் திறப்பி என்றால் என்ன?
இதய வல மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலுள்ளது. வலமேலறையிலிருந்து கீழறைக்குக் குருதி செல்லுமாறு செய்யும். கீழறை சுருங்கும் பொழுது நுரையீரல் தமனிக்குச் செல்லும்.
18. கருவில் இதயம் எப்பொழுது, எவ்வாறு தோன்றுகிறது?
கரு உருவான மூன்றாம் வாரத்தில் இதயம் சிறிய குழல் போன்று தோன்றுகிறது.
19. கருவில் இதயம் எப்பொழுது துடிக்கத் தொடங்குகிறது?
கருவிற்கு ஐந்துவாரம் ஆகும்பொழுது இதயம் துடிக்கத் துவங்கும்.
20. இதயச் செயல்பாட்டுத்திறக் காரணிகள் யாவை?
1. முன் சுமை
2. பின் சுமை
3. சுருங்குதிறன்
4. இதயத் துடிப்பளவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இதயம், யாவை, திறப்பிகள், குருதி, என்ன