மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்
111. விளையாட்டாளர் கால் சொறி என்றால் என்ன?
ஒட்டுண்ணிப் பூஞ்சையினால் விரல்களுக்கிடையே ஏற்படும் தொற்று நோய்.
112. இலாட வடிவச் சிறு நீரகம் என்றால் என்ன?
பிறவி வடிவக் கோளாறுகளில் மிகக் கடுமையானது. இரு சிறு நீரகங்களும் தம் கீழ் முனைகளில் இணைக்கப் பட்டிருக்கும். சிறுநீர் தொற்றலே காரணம்.
113. நீர்க்கடுப்பு என்றால் என்ன?
சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி.
114. சிறுநீரக நோய் மரபணு என்றால் என்ன?
பிகேடி - 1 என்னும் மரமணு சிறுநீரக நோய்க்குக் காரணமாகும். இந்நோயின் முழுப்பெயர் தற்புரி ஒங்கு பன்மக்கட்டி சிறுநீரக நோய் (ADPKD - auto somai dominant polycystic kidney disease) .
115. இது எவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டது?
9 ஆண்டு ஆராய்ச்சிக்குப்பின் (பிரிட்டன், ஆலந்து) இது கண்டு பிடிக்கப்பட்டது. நிறப்புரி 16 என்னும் புரியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. (1994)
116. கழலை என்றால் என்ன?
தைராக்சின் சுரப்பில் அயோடின் ஊட்டம் குறைகின்ற பொழுது ஏற்படும் குறைநோய். தொண்டைச் சுரப்பி பருப்பதால் கழுத்து முன்பகுதியில் கரளை உண்டாகும்.
117. உதட்டுப் பிளவு என்றால் என்ன?
மேல் உதட்டில் ஏற்படும் பிறவிப் பிளவு.
118. அக்கி என்றால் என்ன?
நச்சியத்தினால் ஏற்படும் தோல் வெடிப்பு நோய்.
119. பிசிஜி என்றால் என்ன?
பேசிலி கால்மெட்டி குயரின். என்புருக்கி நோய்க்கு எதிராகச் செலுத்தப்படும் ஆனவன்.
120. பசியின்மை என்றால் என்ன?
உண்ண வேண்டும் என்னும் உணர்வு இல்லாத நிலை. உணவைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஏற்படும், நோய், என்னும், சிறுநீரக