புவியியல் :: புவி அறிவியல்
1. புவி அறிவியல்கள் என்பவை யாவை?
புவியின் மேற்பரப்பை ஆராயும் அறிவியல் துறைகள். இவற்றில் புவிஇயல், புவி அமைப்பியல், புவி இயற்பியல், புவி வேதியியல் முதலியவை அடங்கும்.
2. புவி இயலுக்குப் பழைய பெயர்கள் என்ன?
இயற்கை வரலாறு, இயற்கை மெய்யறிவியல்.
3. பண்டைய புவிஇயலார் இருவர் யார்?
தேல்ஸ் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு. ஹெரோடோடஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. இருவரும் கிரேக்க அறிஞர்கள்.
4. கி.பி. முதல் நூற்றாண்டில் 17 தொகுதியுள்ள புவி இயல் நூல் எழுதியவர் யார்?
ஸ்ட்ரோபோ. இதில் இவர் தாம் நேரில் பார்த்தவற்றைக் குறித்துள்ளார்.
5. கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க புவி இயற்பியலார் யார்?
தாலமி.
6. தாலமியின் அரும்பணி யாது?
இவரே புவி இயலை முறைப்படுத்தியவர். இவர் தம் புவி இயல் வழிகாட்டி என்னும் நூல் 8 தொகுதிகளைக் கொண்டது.
7. புவி இயல் வரலாற்றில் கண்டுபிடிப்புக் காலம் என்று கூறப்படுவது எது? ஏன்?
15 ஆம் நூற்றாண்டு. இந்நூற்றாண்டில் பார்ட்டோலோமு டயஸ், வாஸ்கோடகாமா, கொலம்பஸ் ஆகிய மூவரும் தங்கள் பயணங்களின் மூலம் உலகை விரிவாக்கினர்.
8. ஜெர்மன் நாட்டுப் படத் தயாரிப்பாளர் யார்? அவர் குறிப்பிடத்தக்க பணி யாது?
மார்டின் வால்டு சீமுல்லர் (1470 -1521). 1507இல் உலகப் படத்தை உருவாக்கினார்.
9. புவி இயல் ஒரு கல்விப் பாடமாவதற்குரிய தகுதிகளை அளித்தவர் யார்?
பெர்ன்ஹார்டஸ் வெரினியல் (1622 - 1650). இவர் தம் பொதுப் புவி இயல் என்னும் நூலை 1650இல் வெளியிட்டார். இதில் வட்டாரப் புவி இயல், நடைமுறைப் புவி இயல் ஆகிய துறைகளின் கருத்துகளை நிறுவினார்.
10. 19 ஆம் நூற்றாண்டில் புவி இயலின் நிலை என்ன?
புவி இயல் ஒரு வண்ணனை அறிவியலாக இருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அறிவியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவி, இயல், யார், இவர், நூற்றாண்டு, நூற்றாண்டில்