புவியியல் :: புவி அறிவியல்
11. இக்காலப் புவி இயலை நிறுவியவர்கள் யார்?
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்
கார்ல் ரிட்டர்
12. அலெக்சாண்டர் ஹம்போல்ட் பங்களிப்பு என்ன?
இவர் தாவரப் புவிஇயலை நிறுவியவர். விண்ணகம் (1845 - 1862) என்னும் 5 தொகுதி நூலை எழுதியவர்.
13. கார்ல் ரிட்டர் பங்களிப்பு என்ன?
இவர் மனிதப் புவி இயலை அறிமுகப்படுத்தியவர்.
14. 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க புவி இயலார் யார்?
எலன் சர்ச்சில் செம்பிள்.
15. 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய இரு வகைப் புவி இயல் கொள்கைகள் யாவை?
1. சூழ்நிலைக் கொள்கை
2. இயலுமைக் கொள்கை
16. சூழ்நிலைக் கொள்கை என்றால் என்ன?
மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அவன் வளர்ச்சியை உறுதி செய்வது சூழ்நிலையே.
17. இக்கொள்கையை வற்புறுத்தியவர் யார்?
எல்ஸ்வொர்த் ஹிண்டிங்கடன்.
18. இயலுமைக் கொள்கை என்றால் என்ன?
தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கொண்டு மனிதன் தன் வளர்ச்சியைத் தெரிவு செய்யக் கூடியவனாக உள்ளான்.
19. 1960களில் ஏற்பட்ட பெரிய மாற்றம் என்ன?
முறையியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. புள்ளி இயல் ஒர் ஆராய்ச்சி நுணுக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
20. இப்புள்ளியியல் நுணுக்கத்திற்கு முன்னோடி யார்?
ஸ்வீடனில் வாழ்ந்த டார்சன் ஹேகர்ஸ் ட்ரேண்ட், ஜெர்மனியில் வாழ்ந்த வால்டர் கிறிஸ்டாலர். 1920களிலும் 1930களிலும் இவர்கள் புள்ளியியல் முறையைப் பயன்படுத்தினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அறிவியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, கொள்கை, யார், புவி