புவியியல் :: புவி அறிவியல்
21. புவியியலுக்குரிய இரு அணுகுமுறைகள் யாவை?
1. நடைமுறைப் புவி இயல்
2. வட்டாரப் புவி இயல்
22. நடைமுறைப் புவி இயல் என்றால் என்ன?
இதை முறைசார் புவி இயல் என்றும் கூறலாம். ஒர் அமைப்பை இடத் தொடர்பாக ஆராய்வது. இதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் பரவலும் அடங்கும். இது மனிதனோடு தொடர்பு படுத்தப்படும்.
23. இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக.
மருத்துவப் புவி இயலை எடுத்துக் கொள்வோம். நோயை உண்டாக்கும் உயிரிகளின் பரவலையும் அந்நோய் அங்கு வாழும் மக்களோடு கொண்டுள்ள தொடர்பையும் இது ஆராய்வது.
24. புவி இயல் என்றால் என்ன?
புவி மேற்பரப்பு இயல்புகள் அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும் துறை.
25. புவி இயலின் பிரிவுகள் யாவை?
1. இயற்கைப் புவி இயல்
2. வட்டாரப் புவி இயல்
3. மனிதப் புவி இயல்
26. இயற்கைப் புவிஇயல் என்றால் என்ன?
புவியிலுள்ள இயற்கை நிலைமைகள், முறைகள் ஆகியவற்றை ஆராய்வது. இவை இடத்தொடர்பான மலை, தீவு முதலியவற்றை உருவாக்குபவை.
27. இயற்புவி இயலிலுள்ள பிரிவுகள் யாவை?
1. புவி உருவியல் - நிலத்தோற்றங்களை ஆராய்வது. இது புவியமைப்பியலுக்கும் புவி இயலுக்கும் இடையே ஒரு பாலமாக அமைவது.
2. உயிர்ப்புவிஇயல் - இதற்கு வேறுபெயர் பொருளியல் புவி இயல். உயிர்ப்பொருள்களை ஆராய்வது.
3. காலநிலை இயல்-வானக் கோலங்களை ஆராய்வது.
28. வட்டாரப்புவி இயல் என்றால் என்ன?
சார்பாக உள்ள ஒரு சிறிய பகுதியின் எல்லா நிலைகளையும் இது ஆராய்வது. இப்பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுவது. 100 மிமி க்குக் குறைவாக மழை பெறுமிடத்தை வட்டாரம் என்கிறோம். அல்லது அவ்விடத்தில் வாழும் மக்கள் வயது 15 க்குக் கீழிருக்கும்.
29. மனிதப் புவிஇயல் என்றால் என்ன?
மக்கள் இடத்தொடர்பாக எவ்வாறு பரவியுள்ளனர், அவர்கள் தொழில்கள் என்ன என்பதை ஆராய்வது.
30. இதிலுள்ள பிரிவுகள் யாவை?
1. பண்பாட்டுப்புவி இயல் - பண்பாட்டுக் குழுக்களை ஆராய்வது.
2. மக்கள் தொகைப் புவி இயல் - மக்கள் பரவலை ஆராய்வது.
3. பொருளியல் புவி இயல் - பொருளியல் செயல்களை ஆராய்வது. விளை பொருள்கள்.
4. வரலாற்றுப் புவி இயல் - மனித இனத்தின் வட்டாரச் சூழ்நிலையை ஆராய்வது.
5. அரசியல் புவி இயல் - அரசு வகைகளை ஆராய்வது.
6. நகரப் புவி இயல் - நகரங்களை ஆராய்வது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அறிவியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவி, இயல், ஆராய்வது, என்ன, என்றால், யாவை, மக்கள், பிரிவுகள், பொருளியல்