புவியியல் :: புவி அறிவியல்

51. புவி ஒலிப்பி என்றால் என்ன?
கனிவளத்தோட்டத்தில் புவி இயற்பியலில் பயன்படும் கருவி. அலைத்துடிப்பை ஏற்படுத்துவது.
52. சுழல் கவராயம் என்றால் என்ன?
விரைவாகத் தடையின்றிச் சுழலும் சக்கரத்தினால் திசையைக் காட்டும் கருவி. இது புவிச் சுழற்சியால் ஏற்படுவது. அச்சு வட, தென்முனைகளைக் காட்டும்.
53. இதைப்புனைந்தவர் யார்?
அமெரிக்க எல்மர் பெரி 1911இல் புனைந்தார்.
54. சுழல் நோக்கி என்றால் என்ன?
சுழல் பொருள்களின் இயக்கத்தை விளக்க, உயர் விரைவில் சுழலும் உருளையுள்ள கருவி. கப்பலை நிலைப்படுத்தும் கருவி.
55. சோனார் என்றால் என்ன?
ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் என்பது இதன் பொருள் (Sound Navigation and Ranging). இது ஒரு கருவி மட்டுமன்று, நுணுக்கமும் ஆகும்.
56. இது எவ்வாறு வேலை செய்கிறது?
இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலித்தல் முறையில் கண்டறிகிறது. இந்நிகழ்ச்சியில் உயர் அதிர் வெண்ணுள்ள ஒலித்துடிப்பு பொருளுக்கு அனுப்பப்படுகிறது. இது பொருளில் பட்டு எதிரொ லித்து மீண்டும் கருவியை அடைகின்றபொழுது, வழியறி தலும் எல்லை காணலும் ஒரு சேர நடைபெறுகின்றன. துடிப்பு பொருளை அடைந்தது மீண்டும் கருவியை அடைய ஆகும் நேரம் பொருளின் ஆழத்தைக் குறிக்கும்.
57. ரேடார் (Radio Detection and Ranging) என்றால் என்ன?
வானொலியால் இடமறிதலும் எல்லை காணலும் என்பது இதற்குப்பொருள். இது ஒரு மின்னணுக் கருவியமைப்பு.
58. இது எவ்வாறு வேலை செய்கிறது?
வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்பி எதிரொளிப்பதன் மூலம் இச்செயல்கள் நடைபெறுகின்றன.
59. இதன் பயன்கள் யாவை?
செயற்கை நிலாக்களின் வழி அறியவும், தொலைவு, அட்சக்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது.
60. லோரான் (Long Range Aid to Navigation) என்பது யாது?
கப்பல் போக்குவரவிற்கு நீண்ட எல்லை உதவி என்பது இதன்பொருள். வானவூர்திகள் அல்லது கப்பல்களுக் குரிய வானொலி வழிப்போக்குவரத்து முறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அறிவியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், கருவி, என்ன, எல்லை, என்பது, சுழல், காணலும்