புவியியல் :: கண்டமும் நிலத்தோற்றங்களும்
1. கண்டம் என்றால் என்ன?
கடல் தரைக்கு மேல் எழும் பெரிய நிலத்தொகுதி.
2. கண்டங்கள் எத்தனை?
கண்டங்கள் ஏழு. ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா.
3. இவற்றில் சிறியது எது? பெரியது எது?
சிறியது ஆஸ்திரேலியா. பெரியது ஆசியா.
4. மூன்றாவது பெரிய கண்டம் எது?
ஆப்பிரிக்கா.
5. கண்டங்களின் பரப்பு என்ன?
149 மில்லியன் சதுர கி. மீ.
6. கண்டக் கொள்கை யாது?
எல்லாக்கண்டங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலத் தொகுதியாக இருந்தன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்டு அவை விலகத் தொடங்கின. இது பரவலாக உள்ள கொள்கை.
7. கண்ட நகர்ச்சி என்றால் என்ன?
ஒரு தனித்தொகுதியாகத் தோன்றிய புவிக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று சார்பாக நகர்ந்து விடுகின்றன என்னுங் கொள்கை.
8. இக்கொள்கையை உருவாக்கியர் யார்?
இதை 1858 இல் ஏ. சிண்டர் என்பவர் உருவாக்கினார். 1912 இல் ஆல்பிரட் வேக்னர் விரிவாக்கினார்.
9. ஆசியாவின் இயற்கைப் பிரிவுகள் யாவை?
1. மைய மலைத்தொடர்
2. வடக்குத் தாழ் நிலங்கள்
3. ஆசிய பீடபூமிகள்
4.நதிப்பள்ளத்தாக்குகள்
5. கிழக்கிலும் மேற்கிலும் உள்ள தீவுக் கூட்டங்கள்.
10. ஆசியாவிலுள்ள தீவு நாடுகள் யாவை?
ஜாவா, சுமத்ரா, போர்னிலா, பிலிப்பைன்ஸ், பூரீலங்கா, அந்தமான், நிக்கோபார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டமும் நிலத்தோற்றங்களும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கொள்கை, கண்டங்கள், என்ன