புவியியல் :: கண்டமும் நிலத்தோற்றங்களும்
51. பாறை என்பது யாது?
நிலத் தோற்றங்களில் ஒன்று பாறை.
52. பாறையின் வகைகள் யாவை?
1.நெருப்புப்பாறை - தொன்மை வாய்ந்தது. பாறைக் குழம்பு உறைந்து தோன்றுவது. இதிலிருந்து கிரானைட் பாறை தோன்றுகிறது.
2.படிவுப்பாறை சிதைவுறும் சிறுகற்கள், பெருமணல், மண், களிமண் முதலியவை படிந்து இறுகுவதால் இப்பாறை தோன்றுகிறது - கரிமப்பாறை.
3.உருமாறுபாதை வெப்பம் நீரோட்டம், நில அசைவு, அதிக அழுத்தம் முதலியவை காரணமாக நெருப்புப் பாறைகளும், படிவுப் பாறைகளும் உருமாறி வேறு உருவத்தை அடைகின்றன.
53. சலவைக்கல் எவ்வாறு உண்டாகிறது?
சுண்ணாம்புக்கல் உருமாறிச் சலவைக் கல் ஆகிறது.
54. பாறையடுக்கு என்றால் என்ன?
பாறைக்கம்பமே பாறையடுக்கு. ஆர்க்னே தீவுகளில் காணப்படும். ஹோலி ஒல்டுமேன் (தூய முதுவர்) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
55. பெரும் பவழப் பாறைத்தொடர் (great bamier reef) என்றால் என்ன?
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரைக்கு இணை யாகச் சற்றேறக்குறைய 100 கி. மீ தொலைவில் உள்ள நீண்ட பவழப் பாறைத்திட்டு. இதன் நீளம் 2000 கி. மீ.
56. கூரை விழுதுகளும் தரைவிழுதுகளும் என்றால் என்ன?
கார்பனேட்டுப்படிகங்களாலான கல் விழுதுகள் கூரையில் தொங்கியும் தரையில் நிலைத்தும் காணப்படும். இக்காட்சி சுண்ணாம்புக்கல் குகைகளில் காணப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டமும் நிலத்தோற்றங்களும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காணப்படும், என்ன, என்றால், பாறை