புவியியல் :: கண்டமும் நிலத்தோற்றங்களும்
11. உலகிலேயே உயர்ந்த பிடபூமி எது?
திபேத் பீடபூமி.
12. இந்தியாவிலுள்ள முக்கியப் பீடபூமி எது?
தக்காணப் பீடபூமி.
13. ஆசியக் கண்டத்தின் சிறப்பியல்புகள் யாவை?
1.உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட்சிகரம் உள்ளது.
2. உலகிலேயே மிகத் தாழ்வான சாக்கடல் கரையோரத்தில் உள்ளது.
3.உலகிலேயே மிகப்பெரியதும் உயரமானதுமான திபேத் பீடபூமி இங்குள்ளது.
4. சைபீரியாவில் வெர்கொயான்ஸிக் என்னுமிடத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 15.செ.
5. சிந்து பாலையில் மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.
6. சிரபுஞ்சி என்னுமிடத்தில் உலகிலேயே அதிக மழையளவான 1080 செ.மீ பதிவாகியுள்ளது.
7. 25 செ.மீக்கும் குறைவாக மழை பெறும் இடங்கள் ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளன.
8. தூந்திரப் பிரதேசத் தாவரமும் நிலநடுக் கோட்டுத் தாவரங்களும் இங்குள்ளன.
9. உலகிலேயே மிக நெருக்கமான மக்கள் தொகை கொண்ட கண்டமிது.
14. ஆசியா கண்டம் பெரியது. எப்படி?
புவியின் மொத்த நிலப்பரப்பில் 1/3 பங்கைக் கொண்டுள்ளது.
15. இக்கண்டத்தின் மொத்தப்பரப்பு என்ன?
45 மீல்லியன் சதுர கி.மீ.
16. ஆசியா கண்டத்தை வேறுபாடுகள் நிறைந்த கண்டம் என்கிறோம். ஏன்?
இதன் நிலத்தோற்றம், காலநிலை, இயற்கைத் தாவரம், புவியியல் இயல்புகள் ஆகியவற்றில் பல வகை வேறுபாடுகள் உள்ளதால் இப்பெயர்.
17. நிலத்தோற்றங்கள் என்பவை யாவை?
மலை, பாறை, குன்று, பள்ளத்தாக்கு பீடபூமி முதலியவை நிலத்தோற்றங்கள் ஆகும்.
18. நிலத்தோற்றங்களின் பண்புகள் யாவை?
1. இமயமலை குளிர்க்காற்றைத் தடுத்து, அதன் கடுமையைத் தணிக்கிறது.
2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக்கடலிலிருந்து வரும் தென்மேற்குப் பருவக் காற்றைத் தடுத்து மேற்குப் பகுதிக்கு மழையைப் கொடுக்கின்றன.
3. பாறைகளில் தாதுக்கள் உள்ளன.
4. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் செழிப்பான வண்டல் மண் படிந்த சம நிலங்களை உருவாக்குதல்.
5. மலைகளில் உருவாகும் அருவிகள் மின்சாரம் பெற உதவுகின்றன.
19. சிதைவு என்றால் என்ன?
புவி மேற்பரப்பிலுள்ள பாறைகள் உடைந்து துகள்களாதல்.
20. இதற்குரிய காரணிகள் யாவை?
வெப்பம், மழை, பனி, காற்று, அலைகள், தாவரம், விலங்கு
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டமும் நிலத்தோற்றங்களும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உலகிலேயே, பீடபூமி, யாவை