புவியியல் :: கண்டமும் நிலத்தோற்றங்களும்
41. உலகின் நீளமான ஆறு எது? நீளம் குறைந்த ஆறு எது?
நீளமான ஆறு நைல் - ஆப்பிரிக்கா நீளம் குறைந்த ஆறு தேம்ஸ் - பிரிட்டன்.
42. மலை என்பது யாது?
நிலத்தோற்றங்களில் ஒன்று. குன்றைவிடப் பெரியது. முனைப்பாக உயர்ந்து தெரிவது.
43. மலைகள் எவ்வாறு தோன்றுகின்றன?
சில மலைகள் எரிமலைகள் ஆகும். ஏனையவை கவிகை மலைகளாகும். இவை உருகிய பாறையிலிருந்து உண்டானவை. சில மலைகள் பாறைகள் பிழியப்பட்டு மடியும் பொழுது தோன்றுபவை. ஒரு சில புவிமேற் பரப்பில் ஏற்படும் பிளவுகளுக்கிடையே உண்டாகும் நிலத்தொகுதிகள்.
44. தற்பொழுதுள்ள மலைகள் மூத்தவையா இளையவையா?
இளையவை. மூத்தவை அழிந்துவிட்டன.
45. உலகின் பெரிய ஐந்து மலைகள் யாவை?
1. எவரெஸ்ட் மலை - 8,848 மீ.
2. கே2 - 8,750 மீ.
3. கன்சின்சங்கா - 8,597 மீ.
4. தாட்சி - 8,511. மீ.
5. மாக்கலு - 8,481 மீ.
46. மலைகளில் உயர்ந்தது எது?
எவரெஸ்ட் மலை.
47. உலகில் மிக உயர்ந்த மலைகள் எத்தனை?
20 ஆகும்.
48. உச்சி முதல் அடிவரையுள்ள உயரமான மலை எது?
ஆவாய் தீவுகளிலுள்ள மானா கியா என்னும் மலை உச்சி ஆகும். கடல் தரையிலிருந்து 1203 மீட்டர் உயர முள்ளது. இதில் பாதி (4.205 மீ) கடல் நீருக்கடியில் உள்ளது.
49. சில உயர்ந்த மலைகள் மீது பனி இருப்பதேன்?
கீழிருந்து நாம் மேலே செல்லும் பொழுது ஒவ்வொரு 1,000 மீட்டருக்கு 5° செ அளவுக்கு வெப்பநிலை குறைகிறது. உயர்ந்த மலைகளின் உச்சியில் மிகக் குறைந்த காற்று கோடையிலும் உள்ளதால் அங்குப் பனி உள்ளது.
50. பிளவுப் பள்ளத்தாக்கு என்றால் என்ன?
இரு பிளவுகள் ஒன்றுக்கொன்று அருகில் செல்லும் பொழுதுஅவற்றிற்கிடையே உள்ள நிலத்தொகுதி அமிழ்ந்து பிளவுப்பள்ளத்தாக்கை உண்டாக்கும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும். இதன் நீளம் 6,400 கி.மீ. சிரியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரை செல்வது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டமும் நிலத்தோற்றங்களும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மலைகள், ஆகும், உயர்ந்த, நீளம், குறைந்த