புவியியல் :: கண்டமும் நிலத்தோற்றங்களும்
31. காற்றுப் படிவித்தலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள் யாவை?
1. காற்றடி வண்டல்
2. மணல் மேடுகள்
32. தொடர் மணல் மேடுகளின் நீளமும் உயரமும் என்ன?
நீளம் பல கிலோ மீட்டர்கள். உயரம் 100 கி.மீ.
33. சமவெளி என்றால் என்ன?
தாழ்ந்த சமநிலப்பகுதி சமவெளியாகும். எ-டு கங்கைச் சமவெளி, காவிரிச் சமவெளி.
34. மேட்டுநிலம் அல்லது பீடபூமி என்றால் என்ன?
அக்கம்பக்கத்தில் உள்ள தாழ்ந்த நிலத்தை விட உயர்ந்து, ஏறத்தாழ சமநிலமாயுள்ள பெரும் நிலப்பகுதி . எ-டு. திபெத் பீடபூமி.
35. மேட்டு நிலங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
ஆறுகள், பணியாறுகள், காற்று, வானிலை முதலிய மாறுபாடுகள் இயற்கை ஆற்றல்கள். இவற்றில் மலைப்பகுதிகள் நீண்டகாலம் அரிக்கப்பட்டு நாளடைவில் தேய்ந்து பீடபூமி ஆகின்றன.
36. உலகின் மிகப் பெரிய தீவு எது? மிகச் சிறிய தீவு எது?
மிகப்பெரிய தீவு ஆஸ்திரேலியா. மிகச் சிறிய தீவு ஸ்ரீலங்கா.
37. உலகில் மிகப் பெரிய தீவுகள் எத்தனை?
கிட்டத்தட்ட 26.
38. தீவுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
கடல்மட்டம் தற்பொழுது உள்ளதைவிடக் குறைவாக இருந்த பொழுது, சில தீவுகள் நிலப்பரப்புகளாகத் தோன்றிக் கண்டங்களுடன் நீண்ட காலங்களுக்கு முன் இணைந்தன. பிரிட்டிஷ் தீவுகள் ஒரு காலத்தில் ஐரோப்பா முதன்மை நிலத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. பிற தீவுகள் கடல் படுகையிலிருந்து தோன்றிய எரிமலைகளிலிருந்து தோன்றியவை. இவ்வாறே ஐஸ்லாந்திற்கு அருகிலுள்ள சர்ட்சே தீவு தோன்றிற்று. 1963-1967 க்கிடையே இத்தீவு கடல் தரையிலிருந்து 289 மீட்டர் உயரத்திற்குக் கிளம்பியது. அது 170 மீட்டர் உயரத்திற்கு கடல் மட்டத்திற்கு மேல் வந்தது.
39. உலகிலுள்ள தீபகற்பங்கள் யாவை?
அரேபியா, தென்னிந்தியா, அலாஸ்கா, லேப்ரடார், ஸ்காண்டிநேவியா, ஐபீரியன், பெனின்சுலா.
40. உலகின் ஆழமான குகைகள் யாவை?
1. ரெசியு குயு பாலிஸ் - பிரான்சு
2. செயிண்ட் ரெசியு டி லா பியரி - பிரான்சு
3. நெஸ்நாயா, காகசஸ் - உருசியா
4. சிஸ்டிமா ஹறியாட்லா - மெக்சிகோ.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்டமும் நிலத்தோற்றங்களும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தீவு, தீவுகள், கடல், பீடபூமி, சமவெளி, என்ன