வேதியியல் :: கரிம வேதியியல்
1. அய்டிரோகார்பன்கள் என்றால் என்ன?
அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5 லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிகமூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள்.
2. அய்டிரோகார்பன் வினை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? எப்பொழுது?
பேரா. ஜார்ஜ் ஒலா, 1994.
3. இயற்கை வளி என்றால் என்ன?
வளிநிலை அய்டிரோ கார்பன் சேர்ந்த கலவை. முதன்மையாக, மீத்தேன், ஈத்தேன், புரோபேன், பூட்டேன் முதலிய வளிகளைக் கொண்டது. கரிக்கருமை செய்யப் பயன்படுவது.
4. அய்டிரோகார்பன்களின் வகைகள் யாவை?
1. நிறைவுற்றவை - ஈத்தேன், மீத்தேன்.
2. நிறைவற்றவை - ஈத்தீன், ஈத்தைன்.
3.நறுமணமுள்ளவை. வளைய அமைப்புள்ளவை. பென்சீன், நாப்தலீன்.
5. வளையச் சேர்ம வகைகள் யாவை?
அணுவளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஒருபடித்தான வளையச் சேர்மம், பலபடித்தான வளையச் சேர்மம் என இருவகை.
6. நறுமணச் சேர்மம் என்றால் என்ன?
தன் அமைப்பில் பென்சீன் வளையங்களைக் கொண்ட கரிமச் சேர்மம், எ-டு பென்சீன்.
7. வளையச் சேர்மம் என்றால் என்ன?
வேதிச்சேர்மத்தில் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருப்பவை.
8. நாப்தா என்பது என்ன?
பலவீதங்களில் அய்டிரோகார்பன்கள் சேர்ந்த கலவை. பாரபின் எண்ணெய், நிலக்கரித்தார் ஆகியவற்றிலிருந்து பெறப்படுவது.
9. நாப்தலீன் என்றால் என்ன?
நிறமற்ற பளபளப்பான பொருள். பூச்சிக்கொல்லி.
10. நெட்ரோபென்சீன் என்பது யாது?
வெளிறிய மஞ்சள் நிற நீர்மம். கரைப்பான், ஆக்சிஜன் ஏற்றி, அனிலைன் தரைமெருகேற்றிகள் முதலியவை செய்யப் பயன்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், சேர்மம், வளையச், கொண்டவை, கொண்ட, பென்சீன்