வேதியியல் :: கரிம வேதியியல்

61. சர்க்கரைச் செறிவுமானி என்றால் என்ன?
சர்க்கரைக் கரைசல்களின் செறிவினை அளக்குங் கருவி.
62. கேலக்டோஸ் என்றால் என்ன?
பால் சர்க்கரையை நீராற்பகுக்கக் கிடைப்பது. பன்மச் சர்க்கரைடாகக் கடற்பாசிகளிலும் கோந்துகளிலும் காணப்படுவது.
63. பழச்சர்க்கரை (பிரக்டோஸ்) என்றால் என்ன?
மிக இனிப்பான சர்க்கரை. தேனிலும் பழங்களிலும் உள்ளது. இனிப்பூட்டும் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது.
64. அகார்-அகார் என்றால் என்ன?
கடல்பாசிகளிலிருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள்.
65. இதன் பயன்கள் யாவை?
வளர்ப்புக்கரைசலைக்கட்டியாக்கும், உணவுப் பண்டங்கள் செய்ய.
66. பைரிடினின் பயன்கள் யாவை?
அருவருக்கத்தக்க மணமுள்ளதும் நிறமற்றதுமான நீர்மம். கரைப்பான், வினையூக்கி, உப்பீனிஏற்றி.
67. பைரிமிடின் என்பது என்ன?
நைட்ரஜன் ஊட்டமுள்ள எளிய கரிமக்கூறு.
68. இதன் மூலங்கள் யாவை?
சைட்டோசின், தைமின், யூராசில், தயமின்.
69. இம்மூலங்கள் எவற்றின் இயைபுறுப்புகள்?
உட்கரு காடிகளின் இயைபுறுப்புகள்.
70. பியுரைன் என்பது யாது?
வெண்ணிறப்படிகம். அடினைன், குவானைன் முதலிய வேதிப்பொருள்கள் உண்டாகக் கருவாக இருப்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை