வேதியியல் :: கரிம வேதியியல்
51. இருபது அமினோ காடிகள் யாவை?
1. அலனைன்
2. வேலைன்
3. லூசின்
4. ஐசோலுசின்
5. புரோலைன்
6. மெத்தியோனைன்
7. பினைலாலேனைன்
8. கிளைசின்
9. செரைன்
10. தெரியோனைன்
11. சிஸ்டைன்
12. அஸ்பர்ஜின்
13. குளுட்டாமின்
14. டையரோசின்
15. அஸ்பார்டிகக் காடி
16. குளுட்டாமிகக்காடி
17. லைசின்
18. அரிஜினைன்
19. இஸ்டிடைன்
20. டிரிப்டோபன்
52. பெரிடன் என்றால் என்ன?
பெரிய புரத மூலக்கூறு. இதன் மின்னணுக்கள் ஒளி ஊடுருவும் தன்மையற்றவை. ஆகவே, மின்னணு நுண்ணோக்கிகளில் குறியிடும் பொருள். மண்ணிரலில் இரும்புச் சேமிப்புப் புரதமாக உள்ளது.
53. ஆஸ்பர்டின் என்றால் என்ன?
செயற்கை இனிப்பு: சர்க்கரைக்கு மாற்று (1994).
54. டெக்ஸ்ரோஸ் என்றால் என்ன? பயன் யாது?
குளுகோஸ் அல்லது கொடிமுந்திரிச் சர்க்கரை. பழப் பாதுகாப்புப் பொருள். மருந்துகளில் இனிப்பாக்கி.
55. சார்பிடாலின் பயன்கள் யாவை?
வெண்ணிறப்படிகம். சர்க்கரைக்கு மாற்று. தொகுப்புப் பிசியன்கள் செய்ய.
56. சுக்ரோஸ் என்பது என்ன?
கரும்புச் சர்க்கரை. ஓர் இரட்டைச் சர்க்கரை. குளுகோஸ், பிரக்டோஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்படுவது.
57. சர்க்கரை என்றால் என்ன?
பொதுவாக இது கரும்புச்சர்க்கரை. இனிப்புச்சுவை. அதிகம் பயன்படுவது.
58. சர்க்கரைக் காடி என்றால் என்ன?
ஒற்றைச் சர்க்கரையிலிருந்து ஆக்சிஜன் ஏற்றத்தால் உண்டாகும் அமிலம்.
59. சர்க்கரைச் சாராயம் என்றால் என்ன?
ஒற்றைச் சர்க்கரையை ஒடுக்கிப் பெறுவது.
60. சேக்ரைன் என்றால் என்ன?
மிக இனிப்புள்ள வெண்ணிறப் படிகம். கலோரி மதிப்பில்லை. சர்க்கரைக்கு மாற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், சர்க்கரை, சர்க்கரைக்கு, மாற்று