வேதியியல் :: கரிம வேதியியல்
301. பைரோகேலால் என்பது யாது? பயன்கள் யாவை?
கரையக்கூடிய வெண்ணிறப்படிகம். வலுவுள்ள ஒடுக்கி. ஆக்சிஜனை உறிஞ்சுவது. புகைப்படக் கலையில் பெருக்கி. ஆக்சிஜனை மதிப்பிடப் பயன்படுவது.
302. ரேயானின் பயன்கள் யாவை?
மரக்கூழிலிருந்து பெறப்படும் செயற்கை இழை. துணிகள் செய்யப் பயன்படுவது.
303. இதன் வகைகள் யாவை?
1. விஸ்கோஸ் ரேயான்
2. அசெட்டேட் ரேயான்.
304. ரிசினோலெயிகக் காடியின் பயன் யாது?
மஞ்சள்நிற நீர்மம். சவர்க்காரம் செய்யப் பயன்படுவது.
305. கார்பாலிகக்காடி என்றால் என்ன?
பினாயில். தொற்றுநீக்கி.
306. வேம்புப்பொன் என்றால் என்ன?
நல்ல பயன்தரும் சூழ்நிலைத் தகவுள்ள தொற்றுக்கொல்லி. வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேராசிரியர் கோவிந்தாச்சாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கினார்கள் (1994).
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, யாவை