வேதியியல் :: கரிம வேதியியல்

41. பயனுறுஎண்ணெய் என்றால் என்ன?
மணமுள்ள இயற்கை எண்ணெய். எ-டு நாரத்தை எண்ணெய், பூசுஎண்ணெய்கள்.
42. ஆவியாகக் கூடிய எண்ணெய்கள் யாவை?
பயனுறு எண்ணெய்கள். நீலகிரித் தைலம், கற்பூரத் தைலம்.
43. தாவர எண்ணெய்கள் யாவை?
பொதுவாக வித்துகளிலிருந்து பெறப்படுபவை. நல்லெண்ணெய் - எள். கடலை எண்ணெய் நிலக்கடலை, தேங்காய் எண்ணெய் - தேங்காய்.
44. பைனின் என்பது யாது? பயன் என்ன?
கற்பூரத்தைலத்தின் முதன்மையான பகுதி (டர்பீன்). ஏனைய பயனுறுஎண்ணெய்களிலும் காணப்படுவது. சூடம் செய்யப் பயன்படுவது.
45. கனிம எண்ணெய் என்றால் என்ன?
கனிமத் தோற்றத்தையும் அய்டிரோகார்பன் கலவையுங் கொண்ட எண்ணெய். எ-டு மண்ணெண்ணெய்.
46. கனிமவயமாதல் என்றால் என்ன?
மடகு என்பது நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படும் கரிமப் பொருள்களைக் கொண்டது. இறுதியாக இவை எல்லாம் கரி இரு ஆக்சைடு, நீர், கனிமங்கள் என்னும் பகுதிகளாக மாற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சியே கனிமவயமாதல்.
47. அரக்கெண்ணெய் என்றால் என்ன?
ஆல்ககால், அரக்கு ஆகியவற்றின் மெழுகு எண்ணெய்.
48. அமினோகாடிகள் என்பவை யாவை?
இவை இன்றியமையா வேதிப்பொருள்கள். கார்பாக் சிலிகக் காடிகளின் வழிப் பொருள்கள். உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
49. இவற்றின் வகைகள் யாவை?
பயன்மிகுந்தவை - 10
பயன் குறைந்தவை - 10
50. இக்காடிகளின் பண்புகள் யாவை?
1. புரதத்தின் அடிப்படை அலகுகள்.
2. கார, காடித் தொகுதிகள் கொண்டவை. குறிப்பிட்ட பிஎச் மதிப்பு.
3. ஒளி இயக்கமுள்ளவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எண்ணெய், என்ன, யாவை, என்றால், எண்ணெய்கள்