1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 2
2 அவருக்கு ஐந்து புதல்வர் இருந்தனர். அவர்கள்:
3 காதிஸ் எனப்பட்ட அருளப்பனும், தாசி எனப்பட்ட சீமோனும்,
4 மக்கபேயுஸ் என்ற யூதாசும், அபாரோன் எனப்பட்ட எலேயாசாரும்,
5 ஆபுஸ் எனப்பட்ட யோனாத்தாசும் ஆவர்.
6 யூத மக்களுக்கு யெருசலேமில் செய்யப்பட்ட கொடுமைகளை இவர்கள் கண்டார்கள்.
7 ஐயோ, எனக்குக் கேடாம்! என் மக்கள் படும் தொல்லையையும், புனித நகரத்தின் அழிவையும் நான் பார்க்கவோ பிறந்தேன்! பகைவர் கையில் அது அகப்படும் போது நான் இவ்விடம் உட்கார்ந்திருக்கலாமோ?
8 புனித இடம் அன்னியர் வசமானது. ஆலயம் கயவனைப் போல் ஆனது
9 அதன் மாட்சியின் பாத்திரங்கள் பறிமுதலாயின. அதன் மூத்தோர் தெருக்களில் கொலையுண்டார்கள். இளைஞரோ பகைவரின் வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்.
10 அதன் அரசைக் கைப்பற்றாத இனத்தார் யார்? அதன் பொருட்களைக் கொள்ளையடிக்காதவர்கள் யார்?
11 அதன் அலங்காரமெல்லாம் அழிந்து போனது. தன்னுரிமையோடு நடந்தது போய், இப்போது அது அடிமை போல் ஆனது.
12 நம் புனித காரியங்களும் அழகும் ஒளியும் குன்றிப்போக, அவைகளைப் புறவினத்தார் தீட்டுப்படுத்தினார்கள்.
13 நாம் ஏன் இனியும் வாழ வேண்டும் என்று மத்தத்தியாஸ் சொல்ல,
14 அவரும் அவர் புதல்வரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தவச்சட்டைகளை அணிந்து மிகவும் புலம்பினார்கள்.
15 மோதின் நகரத்திற்கு ஓடிப்போனவர்களைப் பலியிடவும், தூபம் ஏந்தவும், கடவுள் கட்டளையை மீறவும் கட்டாயப்பட்டவர்கள் அந்தியோக்கஸ் அரசனால் அனுப்பப்பட்டவர்கள் அவ்விடம் வந்தார்கள்.
16 இஸ்ராயேல் மக்களில் பலர் இசைந்தவர்களாய் அவர்களிடம் சென்றார்கள். ஆனால், மத்தத்தியாசும் அவர் புதல்வரும் உறுதியில் நிலைகொண்டார்கள்.
17 அந்தியோக்கசால் அனுப்பப்பட்டவர்கள் மத்தத்தியாசை நோக்கி: இந்த நகரத்தில் நீர் சீரும் சிறப்பும் மிக்க பிரபுவாய் இருக்கிறீர். உம் புதல்வரும் சகோதரரும் உமக்கு ஓர் அணிகலன் போல் இருக்கிறார்கள்.
18 ஆதலால், புறவினத்தாரும் யூத மக்களும், யெருசலேமில் தங்கினவர்களும் செய்த வண்ணம், நீரும் முதன் முதல் அரசன் கட்டளையை நிறைவேற்றும். நீரும் உம் புதல்வர்களும் அரசனின் நண்பர்களாவீர்கள். பொன், வெள்ளி, மற்றும் பல்வேறு பரிசுகளால் நீர் நிரப்பப்படுவீர், என்றார்கள்.
19 அதற்கு மறுமொழியாக மத்தத்தியாஸ் உரத்த சத்தமாய்: எங்கள் முன்னோரின் வழக்கத்தை அனுசரிப்பதை எல்லா இனத்தவரும் விட்டு விட்டு அந்தியோக்கஸ் அரசருக்குக் கீழ்ப்படிந்தாலும், அவர் கட்டளைகளை அனுசரிக்க இசைந்தாலும்,
20 நானும் என் புதல்வரும் என் சகோதரரும் எங்கள் முன்னோரின் கட்டளைக்கே கீழ்ப்படிவோம்.
21 கடவுள் எங்கள் மேல் இரக்கமும் கொள்வாராக. அவருடைய கட்டளைகளையும் ஏற்பாடுகளையும் விட்டு விடுவதனால் எங்களுக்கு யாதொரு இலாபமும் இல்லை.
22 அந்தியோக்கஸ் அரசரின் வார்த்தைகளைக் கேட்கவும் மாட்டோம். எங்கள் சட்டங்களால் விதிக்கப்பட்ட கட்டளைகளை மீறி வேறு விதமாய் நடக்கவும், பலியிடவும் மாட்டோம் என்றார்.
23 உடனே அரசன் கட்டளைப்படி மோதின் நகரத்துப் பீடத்தின் மேல் சிலைகளுக்குப் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான்,
24 மத்தத்தியாஸ் அதைப் பார்த்தார். மனம் கசிந்தார், அவர் உடம்பு துடித்தது. கட்டளையின் ஒழுங்குப்படி கோபம் மூண்டு, அவன் மேல் பாய்ந்து, பீடத்தின் மீதே அவனைக் கொன்றார்.
25 அந்தியோக்கசால் அனுப்பப்பட்டு, பலியிடும்படி வற்புறுத்தின மனிதனையும் அதே நேரத்தில் கொன்று, பீடத்தையும் இடித்துத் தள்ளினார்.
26 சலோமியின் மகன் சாம்பரி என்பவனுக்குப் பினேயஸ் செய்தது போல, தாமும் கட்டளையின்பால் கொண்ட ஆர்வத்தால் துண்டப்பட்டார்.
27 அப்போது அந்த நகரத்தில் மத்தத்தியாஸ் உரத்த சத்தமாய்: உடன்படிக்கைக் கட்டளைக்குப் பிரமாணிக்கமுள்ளவன் எவனோ அவன் என் பின்னால் வரக்கடவான் என்று சொல்லி,
28 அவரும் அவர் புதல்வரும் தங்கள் சொத்துகளை விட்டுவிட்டு மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
29 அப்போது பலர் நியாய ஏற்பாடுகளையும் நீதியையும் தேடி பாலைவனத்திற்குச் சென்றார்கள்.
30 அவர்களும் அவர்கள் புதல்வரும் மனைவியரும் மந்தைகளோடு அவ்விடத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் தீச் செயல்களில் மூழ்கியிருந்தார்கள்.
31 அரசன் கட்டளையை மீறிய பலர் பாலைவனத்தின் மறைவிடங்களுக்குப் போய்விட்டார்களென்றும், அவர்கள் பின்னால் இன்னும் பலரும் போயிருக்கிறார்களென்றும் தாவீதின் நகராகிய யெருசலேமில் இருந்த அரசனுடைய மனிதருக்கும் படைக்கும் தெரிவிக்கப்பட்டது.
32 இவர்கள் உடனே அவ்விடம் சென்று அவர்கள் மேல் ஓய்வுநாளில் போர்தொடுத்தனர். மேலும், இவர்கள்:
33 இன்னும் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்களோ? வெளியே வந்து, அந்தியோக்கஸ் அரசன் கட்டளைப்படி செய்வீர்களேயானால் பிழைப்பீர்கள், என்றார்கள்.
34 அவர்களோ: ஓய்வு நாள்முறை தவறாதபடிக்கு வெளியே வரவுமாட்டோம்@ அரசன் செற்படி நடக்கவுமாட்டோம், என்றார்கள்.
35 ஆதலால், இவர்கள் அவர்களை வலிமையோடு தாக்கினார்கள்.
36 ஆனால், அவர்கள் இவர்களை எதிர்க்கவுமில்லை. இவர்கள் மேல் கற்களை எறியவுமில்லை@ தங்கள் குகைகளை அடைத்துக் கொள்ளவுமில்லை.
37 மாறாக, அமைதியான மனத்தோடு நாங்கள் எல்லோரும் சாவோம்@ நீங்கள் எங்களை அநியாயமாய்க் கொலை செய்கிறீர்களென்பதற்கு வானமும் பூமியும் சாட்சியாய் இருக்கும், என்றார்கள்.
38 இவர்கள் ஓய்வு நாளில் அவர்களோடு சண்டை செய்ததால், அவர்களும் அவர்கள் மனைவியரும் பிள்ளைகளும் ஆயிரம் பேர் வரை தம் மந்தைகளோடு மாண்டார்கள்.
39 இதைக் கேள்வியுற்ற மத்தத்தியாசும் அவர் நண்பரும் அதிகத் துக்கம் அடைந்தார்கள்.
40 அப்போது ஒருவன் மற்றொருவனை நோக்கி: நமது உயிரையும் கட்டளையையும் காப்பாற்ற நமது சகோதரர் செய்தது போல நாமெல்லோரும் போர் செய்யாவிடில் நம்மையும் பூமியினின்று விரைவில் ஒழித்து விடுவார்கள், என்றான்.
41 திரும்பவும் அவர்கள் தங்களுக்குள் ஓய்வுநாளில் யார் நம்மை எதிர்த்துப் போரிட வந்தாலும், அவர்களோடு நாமும் போர்புரிவோம்@ நம் சகோதரர் தாங்கள் ஒளிந்திருந்த இடத்தில் மடிந்தது போல நாமும் மடியாதிருக்கக்கடவோம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
42 இஸ்ராயேலரில் வலிமை வாய்ந்தவர்களான அசிதேயரின் ஒரு கூட்டத்தார் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.
43 இவர்கள் எல்லாரும் சட்டத்தை முன்னிட்டு ஒருமனதாகச் சேர்ந்தார்கள். கொடுமைக்குத் தப்பிக் கொள்ள ஓடிப்போனவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டதால், அவர்களது சேனை வலுப்பெற்றது.
44 அவர்கள் படைகளைக் கூட்டி, பாவிகளைச் சினங்கொண்டும், தீயவர்களை மிகுந்த கோபத்தோடும் தாக்கினார்கள். இவர்களோ தப்பிக்கொள்ளத் தங்கள் இனத்தாரிடம் ஓடிவிட்டார்கள்.
45 மத்தத்தியாசும் அவர் நண்பரும் எங்கும் சுற்றித்திரிந்து பீடங்களை அழித்தார்கள்.
46 இஸ்ராயேல் எல்லைகளில் கண்ட விருத்தசேதனம் பெறாத பிள்ளைகளுக்குத் துணிவுடன் விருத்தசேதனம் செய்வித்தார்கள்.
47 அகந்தையின் மக்களை வதைத்துப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் நினைத்த காரியங்களெல்லாம் வெற்றியாயின.
48 புறவினத்தாருடையவும் அரசர்களுடையவும் அடிமைத்தனத்தினின்று அவர்கள் விடுபட்டார்கள். தீயவர் தங்களை மேற்கொள்ள இடம் கொடுக்கவில்லை.
49 மத்தத்தியாஸ் சாகும் காலம் நெருங்கிய போது தம் பிள்ளைகளை நோக்கி: இப்போது அகந்தையின் அரசு உறுதிப்பட்டது. இது கடவுளுடைய தண்டனைக்கும் அழிவுக்கும் கோபத்துக்கும் உரிய காலம்.
50 ஆதலால், என் மக்களே, இப்போது கட்டளையை ஆர்வத்தோடு கடைப்பிடியுங்கள். உங்கள் முன்னோரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள்.
51 உங்கள் முன்னோர்கள் தங்கள் காலத்தில் நடந்து கொண்ட முறையை நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பெருமாட்சியையும் நிலைப்பேற்றையும் அடைவீர்கள்.
52 ஆபிரகாம் சோதனையில் விசுவாசியாய் நிலைகொள்ளவில்லையோ? நீதிமானாக எண்ணப்படவில்லையோ?
53 சூசை தமக்கு இக்கட்டு நேரிட்ட காலத்தில் கடவுளின் கட்டளையைக் காத்தார்@ எகிப்து நாட்டின் ஆளுநரானார்.
54 நம் தந்தையான பினேயஸ் கடவுள் பால் மிக்க பற்றுக் கொண்டிருந்தமையால் நித்திய குருத்துவத்தின் உடன்படிக்கையைப் பெற்றுக் கொண்டார்.
55 யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ராயேலின் தலைவரானார்.
56 காலேப், கடவுள் ஆலயத்தில் மக்களுக்குத் திடம் சொன்னதால் சொத்துரிமை பெற்றார்.
57 தாவீது தம் இரக்க சிந்தையால் என்றென்றைக்கும் அரசரானார்.
58 எலியாஸ், கடவுள் கட்டளைமேல் ஆர்வம் கொண்டிருந்ததால் விண்ணில் சேர்க்கப்பட்டார்.
59 அனானியாஸ், அசாரியாஸ், மிசாயேல் ஆகியோர் விசுவாசத்தால் நெருப்பினின்று மீட்கப்பட்டார்கள்.
60 தானியேல் தம் மாசற்ற தன்மையால் சிங்கத்தின் வாயினின்று காப்பாற்றப்பட்டார்.
61 தலைமுறை தலைமுறையாய் இவ்வாறே நடந்து வந்துள்ளதென்று அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
62 தீயவனுடைய வார்த்தைகளுக்கு அஞ்சாதீர்கள். ஏனென்றால் அவன் பெருமை சகதியும் புழுவும் போல் இருக்கிறது.
63 அவன் இன்று உயர்த்தப்படுகிறான்@ நாளை காணப்பட மாட்டான்@ தான் உண்டான பூமிக்குத் திரும்பினவுடனே அவனைப் பற்றிய நினைவும் ஒழிந்து போகும்.
64 நீங்களோ, என் மக்களே, துணிவு கொள்ளுங்கள்@ கட்டளைப்படி ஆண்மையுடன் செயநீபடுங்கள். ஏனென்றால், அதனால் மாட்சி அடைவீர்கள்.
65 இதோ, உங்கள் சகோதரன் சீமோன் மிகவும் முன்மதி உள்ளவன். அவன் சொல்வதை எப்பொழுதும் கேளுங்கள். அவன் உங்களுக்குத் தந்தை போல இருப்பானாக.
66 இளமை முதல் வலிமை படைத்தவனாகிய யூதாஸ் மக்கபேயுஸ் உங்கள் படைத்தலைவனாக இருந்து சண்டையை நடத்தக்கடவான்.
67 கட்டளையைப் பின்பற்றி நடக்கிறவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து, உங்கள் மக்களை வதைக்கிறவர்களைப் பழிவாங்குங்கள்.
68 அவர்கள் உங்களுக்குச் செய்துள்ள கொடுமையை அவர்களுக்குச் செய்யுங்கள். ஆனால், கட்டளையைப் பொறுத்தமட்டில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லி,
69 அவர்களை ஆசீர்வசித்த பிறகு தம் முன்னோரோடு சேர்க்கப்பட்டார்.
70 அவர் நூற்று நாற்பத்தாறாம் ஆண்டு இறந்தார். மோதின் நகரத்தில் தம் முன்னோர் கல்லறையில் தம் புதல்வரால் அடக்கம் செய்யப்பட்டார். எல்லா இஸ்ராயேலரும் மிகவும் துக்கப்பட்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், இவர்கள், புதல்வரும், அவன், மத்தத்தியாஸ், உங்கள், அரசன், ஏற்பாடு, தங்கள், கடவுள், மேல், கட்டளையை, அவர்களோடு, அந்தியோக்கஸ், ஏனென்றால், போல், என்றார்கள், அப்போது, எங்கள், புனித, எனப்பட்ட, பழைய, மோதின், விட்டு, மத்தத்தியாசும், முன்னோரின், கட்டளைப்படி, ஆதலால், மக்கபே, ஆகமம், நகரத்தில், நோக்கி, பலர், மிகவும், இப்போது, யெருசலேமில், யார், மனைவியரும், மந்தைகளோடு, நமது, திருவிவிலியம், நண்பரும், அவர்களை, வெளியே, நீங்கள், ஓய்வுநாளில், இன்னும், எங்களை, ஓய்வு, தாக்கினார்கள், சேர்ந்து, கொள்ளுங்கள், நடந்து, காலத்தில், தான், அடைவீர்கள், கட்டளையைப், சேர்க்கப்பட்டார், மக்களே, காலம், வலிமை, நாமும், அவர்களும், விருத்தசேதனம், மக்களை, அகந்தையின், சகோதரர், பீடத்தின், சென்றார்கள், இஸ்ராயேல், அந்தியோக்கசால், நீர், சகோதரரும், மிக்க, அவ்விடம், அனுப்பப்பட்டவர்கள், இடம், அவரும், போது, நான், மக்கபேயுஸ், பலியிடவும், நீரும், உரத்த, ஆன்மிகம், ஒருவன், பினேயஸ், செய்தது, பின்னால், கொண்ட, ஆனது, உடனே, எல்லா, சத்தமாய், கட்டளைகளை, புதல்வர், மாட்டோம், ஏற்பாடுகளையும், சொல்லி