1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 16
2 அப்போது சீமோன் தம் இரு மூத்த புதல்வியராகிய யூதாசையும் அருளப்பனையும் அழைத்து, அவர்களை நோக்கி: நானும் என் சகோதரரும் என் தந்தையின் குடும்பமும் எங்கள் இளமை முதல் இந்நாள் வரை இஸ்ராயேலின் பகைவர்களை எதிர்த்து வென்றோம். செய்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கண்டு, பலமுறை இஸ்ராயேலைக் காப்பாற்றினோம்.
3 இப்போதோ நான் முதியவனாகி விட்டேன். ஆதலால் நீங்களும் என் சகோதரரும் எனக்குப் பதிலாய் இருந்து, நம் மக்களுக்காகச் சண்டை செய்யுங்கள். கடவுளும் உங்களுக்கு உதவியாய் இருப்பார் என்று கூறினார்.
4 நாட்டில் இருபதினாயிரம் வீரரையும் குதிரை வீரரையும் அவர்கள் தேர்ந்து கொண்டார்கள்@ செந்தேபேயுசை நோக்கிச் சென்றார்கள்@ மோதினில் இளைப்பாறினார்கள்.
5 காலையில் எழுந்து சமவெளியை அடைந்தார்கள், அவர்களை எதிர்த்துத் திரளான காலாட்களும், குதிரை வீரரும் வந்தார்கள். இரு படைகளுக்கும் நடுவே நதி ஒன்று இருந்தது.
6 அருளப்பனும் அவன் படைகளும் பகைவருக்கு முன்சென்றார்கள். தன் படைகள் நதியைக் கடக்க அஞ்சுவதைக் கண்டு, தானே முந்திக் கடந்தான். அவனைக் கண்டு அவன் படைகளும் அவனுக்குப்பிறகே நதியைக் கடந்தன.
7 அவன் மக்களையும், குதிரை வீரர்களையும் காலாட்களுக்கு நடுவில் இருக்கச் செய்தான்@ ஏனென்றால், பகைவரின் குதிரைப்படை திரளாய் இருந்தது.
8 அவன் புனித எக்காளங்களை ஒலிக்கச் செய்ய, செந்தேபேயுசும் அவன் படைகளும் ஓட்டம் பிடித்தார்கள். அவர்களில் பலர் காயப்பட்டு விழுந்தார்கள்@ மீதியாய் இருந்தவர்கள் கோட்டைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.
9 அப்போது அருளப்பனின் சகோதரன் யூதாஸ் காயமடைந்தான். அருளப்பனோவென்றால் தான் கட்டிய சேதிரோன் வருமட்டும் பகைவரைப் பின்தொடர்ந்தான்.
10 அவர்கள் அசோத்துஸ் சமவெளிகளில் இருந்த கோபுரங்கள் வரை ஓடினார்கள். அவன் அவைகளைத் தீக்கிரையாக்கினான். அவர்களில் இரண்டாயிரம் பேர் மாண்டார்கள். அருளப்பன் அமைதியாய் யூதேயா திரும்பினான்.
11 யெரிக்கோ சமவெளியில் அபோபுஸ் புதல்வன் தோலெமேயுஸ் தலைவனாக இருந்தான். வெள்ளியும் பொன்னும் அவனிடம் ஏராளமாய் இருந்தன.
12 ஏனென்றால், அவன் தலைமைக்குருவின் மருமகனாய் இருந்தான்.
13 ஆதலால் அவன் செருக்குற்று, நாடு முழுமைக்கும் தானே தலைவனாயிருக்க விரும்பினான்@ சீமோனையும் அவர் மக்களையும் கபடமாய் அகற்றி விட எண்ணினான்.
14 சீமோன் யூதேயா நாட்டின் நகரங்களைச் சுற்றி, அவைகளைப் பார்வையிட வந்த போது, நூற்றெழுபத்தேழாம் ஆண்டு சாபாத் என்ற பதினோராம் மாதம் தம் புதல்வர்களாகிய மத்தத்தியாஸ், யூதாஸ் இவர்களோடு யெரிக்கோவில் தங்கினார்.
15 அபோபுசின் புதல்வன் தான் கட்டியிருந்த தோக் என்னும் சிறு கோட்டைக்குள் அவர்களைக் கபடமாய் வர வேற்று, அவர்களுக்குப் பெரிய விருந்து செய்தான். ஆனால், அவ்விடத்தில் சிலரை ஒளித்து வைத்திருந்தான்.
16 சீமோனும் அவர் புதல்வரும் நன்கு உண்டு மயக்கம் கொண்டிருந்த போது தோலெமேயுஸ் தன்னைச் சேர்ந்தவர்களோடு எழுந்து, போர்க்கருவிகளோடு உணவறையினுள் புகுந்து, அவரையும் அவருடைய இரு புதல்வரையும் சில ஊழியர்களையும் கொன்றான்.
17 இவ்வாறு இஸ்ராயேலுக்குத் துரோகம் செய்து, நன்மைக்குத் தீமை செய்தான்.
18 தோலெமேயுஸ் இச்செய்திகளை அந்தியோக்கஸ் மன்னனுக்கு எழுதியனுப்பி, தனக்கு உதவியாகப் படைகளை அனுப்பவும், நாட்டையும் நகரங்களையும் கப்பங்களையும் தனக்குக் கொடுத்து விடவும் கேட்டுக் கொண்டான்.
19 அருளப்பனைக் கொல்வதற்காக வேறு சிலரைக் காசாராவுக்கு அனுப்பினான்@ படைத்தலைவர்கள் தன்னிடம் வந்து சேரும்படியாகவும், தான் வெள்ளியும் பொன்னும் வெகுமதிகளும் அளிப்பதாகவும் அவர்களுக்கு எழுதியனுப்பினான்.
20 யெருசலேமையும், கடவுள் ஆலயம் இருந்த மலையையும் கைப்பற்றச் சிலரை அனுப்பினான்.
21 ஒருவன் காசாராவிலிருந்த அருளப்பனிடம் முன்னதாகவே ஓடிவந்து, அவன் தந்தையும் சகோதரரும் கொலையுண்டதை அறிவித்து: அவன் உம்மையும் கொலைசெய்ய ஆட்களை அனுப்பியிருக்கிறான் என்றான்.
22 அருளப்பன் இதைக் கேள்விப்பட்டுப் பெரிதும் திகிலடைந்தான்: தன்னைக் கொலை செய்ய வந்தவர்களைப் பிடித்துக் கொன்றான்@ ஏனென்றால், அவர்கள் தன்னைக் கொல்லத் தேடினார்களென்று அறிந்திருந்தான்.
23 அருளப்பன் புரிந்த மற்றவைகளும் போர்களும் வீரச் செயல்களும் கட்டின கட்டடங்களும், செய்த யாவும்,
24 அவன் தந்தைக்குப் பிறகு அவன் தலைமைக்குருவான நாள் முதல் அவன் அக்குருத்துவப் பணி ஆற்றிய நாட்களின் குறிப்புப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, பழைய, அருளப்பன், படைகளும், குதிரை, தோலெமேயுஸ், தான், ஏனென்றால், சகோதரரும், மக்கபே, கண்டு, ஆகமம், செய்த, தன்னைக், புதல்வன், யூதேயா, இருந்த, யூதாஸ், சிலரை, செய்தான், கபடமாய், வெள்ளியும், இருந்தான், போது, அவர், பொன்னும், நதியைக், சீமோன், அவர்களை, அப்போது, ஆன்மிகம், திருவிவிலியம், புனித, ஆதலால், வீரரையும், செய்ய, அவர்களில், மக்களையும், தானே, எழுந்து, கோட்டைக்குள்