1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அவருடைய சகோதரரும், அவர் தந்தையோடு சேர்ந்திருந்த எல்லாரும் அவருக்குத் துணை நின்று, இஸ்ராயேலைக் காக்க இனிதே போர் புரிந்தார்கள்.
3 அவரே தம் மக்களின் மாட்சி பெருகச் செய்தார்@ அரக்கனைப் போல் இரும்புக்கவசம் அணிந்தார். சண்டைகளில் போர்க்கருவிகளைத் தாங்கினார். தம் வாளால் பாளையத்தைப் பாதுகாத்தார்.
4 அவர் தம் செயல்களில் சிங்கத்துக்கு ஒப்பானார்@ இரை தேடும் போது முழங்கும் சிங்கக்குட்டி போலானார்@ தீயவரைத் தேடி, அவர்களைப் பின்தொடர்ந்தார்.
5 தம் மக்களை வதைத்தவர்களை நெருப்பில் மடிய வைத்தார்.
6 அவர் மேல் உள்ள பயத்தால் பகைவர் மிரண்டு ஓடினர். கொடுமை செய்தவர்கள் நடுங்கினார்கள். அவரால் எங்கும் மீட்பு உண்டானது.
7 அவர் செய்தவற்றையெல்லாம் கண்ட பல அரசர்கள் கோபத்தால் பொங்கி எழுந்தார்கள். ஆனால் யாக்கோபின் தலைமுறையோ மகிழ்ச்சி கொண்டது. அவர் பெயரை அவர்கள் என்றென்றைக்கும் வாழ்த்துவார்கள்.
8 அவர் யூத நகரங்களுக்குச் சென்று, தீயவரை ஒழித்து, இஸ்ராயேலினின்று கடவுளின் கோபத்தை நீக்கினார்.
9 பூமியின் கடைசி எல்லைவரை அவருடைய பெயர் விளங்கப்பெற்றது. அவர் ஆபத்திலிருந்தவர்களை மீட்டு ஒன்று சேர்த்தார்.
10 அப்போது அப்பொல்லோனியுஸ் என்பவன் புற இனத்தாரைச் சேர்த்து சண்டை செய்வதற்காகப் பெரும் படையைச் சமாரியாவில் கூட்டினான்.
11 அதை அறிந்த யூதாஸ் அவனை எதிர்த்து முறியடித்து, அவனையும் கொன்றர். பலர் காயப்பட்டு விழுந்தார்கள். அவர்கள் உடைமைகளை அவர் கைப்பற்றினார்.
12 அப்பொல்லோனியுசின் வாளை யூதாஸ் எடுத்தக்கொண்டார்@ அதைக் கொண்டே தம் வாழ்நாளெல்லாம் சண்டை செய்தார்.
13 யூதாஸ் விசுவாசிகள் கூட்டத்தையும் சபையையும் தம்மோடு சேர்த்துக் கொண்டாரென்பதைக் கேள்வியுற்ற சீரியா படைத்தலைவனான சேரோன்:
14 என் பெயர் விளங்கச் செய்வேன்@ அரசில் மாட்சி பெறுவேன்@ அரசனின் வார்த்தையை இகழ்ந்த யூதாசோடும், அவனைச் சேர்ந்தவர்களோடும் போர்புரிவேன், என்றான்.
15 போருக்கு ஆயத்தமானான்@ இஸ்ராயேல் மக்களைப் பழிவாங்கும்படி தீயவருடைய படையைத் தனக்கு வலிமையான உதவியாகக் கொண்டு சென்றான்.
16 அவர்கள் பெத்தோரோனை நெருங்கும் பொழுது யூதாஸ் சிலரோடு அவர்களை எதிர்த்துப் போனார்.
17 பெரும்படை ஒன்று தங்களை எதிர்த்து வருவதைக் கண்ட அவர்கள் யூதாசிடம்: இவ்வளவு திரளான கூட்டங்களோடும், வலிமை மிக்க படையோடும் சொற்பமாய் இருக்கும் நாம் எவ்விதம் சண்டை செய்யக் கூடும்? இன்று நாம் பசியினாலும் களைத்துப் போயிருக்கிறோமே, என்றார்கள்.
18 அதற்கு யூதாஸ்: சிலரது கையில் பலர் அகப்பட்டுக்கொள்வது எளிதான காரியம். பலர் என்றாலும் சிலர் என்றாலும், அவர்களைக் காப்பாற்றுவதில் கடவுள் முன்னிலையில் வேறுபாடு இல்லை.
19 ஏனென்றால் வெற்றி கொள்வது திரளான படைகளால் அன்று@ ஆனால், கடவுளிடமிருந்து வரும் வலிமையினால் தான்.
20 நம்மையும், நம் மனைவி மக்களையும் சிதறடித்துக் கொள்ளையடிக்க அகந்தைச் செருக்கோடு அவர்கள் வருகிறார்கள்.
21 நாமோ நமது உயிரையும் கட்டளையையும் காப்பாற்றப் போர் செய்வோம்.
22 நம் கண்களுக்கு முன்பாகவே ஆண்டவர் அவர்களை நசுக்குவார். நீங்களோ அவர்களுக்கு அஞ்சாதிருங்கள், என்றார்.
23 பேசி முடித்தவுடனே அவர் பகைவர் மேல் பாய்ந்தார். சேரோனும், அவன் படைகளும் அவருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்.
24 சமவெளி வரை பெத்தோரோன் இறக்கத்தில் அவர் அவனைப் பின்தொடர்ந்தார். பகைவரில் எண்ணுறு பேர் கொலையுண்டார்கள். மற்றவர்களோ பிலிஸ்தேயர் நாட்டுக்கு ஓடிவிட்டார்கள்.
25 சுற்றிலும் இருந்த புறவினத்தாருக்கெல்லாம் யூதாஸ் மீதும் அவருடைய சகோதரர் மீதும் அச்சமும் திகிலும் உண்டாயின.
26 அவருடைய பெயர் அரசனுக்கு எட்டியது. யூதாசின் சண்டைகளைப் பற்றி எல்லா இனத்தாரும் பேசலாயினர்.
27 செய்திகளை அந்தியோக்கஸ் மன்னன் கேள்விப்பட்டவுடனே, கோபவெறி கொண்டு தன் நாடெங்கும் ஆள் அனுப்பி, சேனைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, பெரும்படை திரட்டினான்.
28 தன் கருவூலத்தைத் திறந்து, படைகளுக்கு ஆண்டுச் சம்பளத்தை அளித்து, எதற்கும் தயாராய் இருக்கும்படி கட்டளையிட்டான்.
29 தன் கருவூலத்தில் செல்வம் குறைவதையும், நிகழ்ந்த போர்களாலும், எப்போதும் கையாண்டு வந்த வழக்கங்களை நாட்டில் கைக்கொள்ளதாபடி தான் செய்த கொடுமையாலும் நாடுகளிலிருந்து திறை வந்து சேராததையும் கண்டான்.
30 தனக்கு முன்னிருந்த அரசர்களைவிடத் தாராளமாகவும் ஏராளமாகவும் கொடுத்தவன், செலவுக்கும் வெகுமதி அளிப்பதற்கும் தன் கருவூலத்தில் போதுமான செல்வம் இல்லையென்று அஞ்சினான்.
31 மனத்தில் மிகக் கலக்கமுற்று நாடுகளுடைய திறையை வாங்குவதற்கும், திரளான செல்வங்களைச் சேகரிப்பதற்கும் பாரசீக நாடு போகத் தீர்மானித்தான்.
32 அவன் அரச குலத்தின் பிரபுவான லிசியாஸ் என்பவனை எப்பிராத் நதி முதல் எகிப்து நதிவரை உள்ள நாட்டில் அரசாங்க காரியங்களையும்,
33 தான் திரும்பும் வரையில் தன் மகன் அந்தியோக்கஸ் என்பவனையும் கவனித்துக் கொள்ளும்படி ஏற்படுத்தினான்.
34 அவனிடம் பாதிப்படைகளையும் யானைகளையும் ஒப்படைத்து, தான் செய்ய நினைத்திருந்த அனைத்தையும், யூதேயா, யெருசலேம் நகர மக்களையும் பற்றிய தன் கட்டளைகளைக் கொடுத்தான்.
35 இஸ்ராயேலின் வல்லமையையும், யெருசலேமில் எஞ்சியிருந்தவர்களையும் அடக்கி அழித்தொழிக்கவும், அவர்கள் பெயரையே அவ்விடத்திலிருந்து அழித்துவிடவும் படைகளை அவர்களுக்கு எதிராய் அனுப்ப வேண்டுமென்றும்,
36 அவர்களுடைய நாடெங்கும் அன்னியரைக் குடியேற்றி அவர்களுக்கே பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான்.
37 பின்னர் மன்னன் மீதிப் படைகளை நடத்திக் கொண்டு தன் நாட்டின் அந்தியோக்கியா நகரத்தை விட்டு நூற்று நாற்பத்தேழாம் ஆண்டு புறப்பட்டான்@ எப்பிராத் நதியைக் கடந்து மலை நாடுகள் வழியாய்ச் சென்றான்.
38 லிசியாஸ் என்பவனோ மன்னனுடைய நண்பரில் வலிமை வாய்ந்தவனான தொரிமீனியன் புதல்வன் தோலெமேயையும் நிக்கானோரையும் கோர்ஜியாவையும் தேர்ந்துகொண்டு,
39 நாற்பதினாயிரம் படை வீரரையும் ஏழாயிரம் குதிரை வீரரையும், யூதேயா நாடு சென்று அதை அரசன் கட்டளைப்படி அழித்தொழிப்பதற்கு அனுப்பினான்.
40 அவர்களும் தங்கள் படைகளோடு சென்று, எம்மாவுஸ் நகருக்கு அருகே சமவெளியில் பாளையம் இறங்கினார்கள்.
41 அந்நாட்டு வியாபாரிகள் இதைக் கேள்விப்பட்டு, இஸ்ராயேல் மக்களை அடிமைகளாய் வாங்குவதற்குத் திரளான வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு தங்கள் ஊழியரோடு பாளையத்துக்கு வந்தார்கள். சீரியா முதலிய மற்ற நாட்டுப் படைகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டன.
42 யூதாசும் அவர் சகோதரரும் ஆபத்துகள் அதிகரிப்பதையும், எதிரிப்படைகள் தங்கள் நாட்டை நெருங்கி வருவதையும் கண்டு, தங்கள் மக்களை அழித்தொழிக்க மன்னன் கொடுத்திருக்கும் கட்டளையை அறிந்தவர்களாய், தங்களுக்குள்:
43 நம் மக்களின் தளர்ச்சியை நீக்கித் திடப்படுத்தி, அவர்களையும் நமது வேத கட்டளைகளையும் காப்பாற்றப் போர்புரிவோம் என்று சொல்லி,
44 பகைவரை எதிர்க்கத் தயாராய் இருக்கவும், கடவுளை வேண்டவும், அவர் இரக்கத்தையும் தயவையும் மன்றாடவும் ஒன்று கூடினார்கள்.
45 யெருசலேம், குடிகள் இல்லாமல் பாலைவனம் போல் இருந்தது. ஏனென்றால், ஒருவரும் உள்ளே போகவும் வெளியே வரவும் காணப்படவில்லை. கடவுளின் ஆலயம் காலால் மிதிக்கப்பட்டது. அன்னியர்கள் கோட்டைக்குள் இருந்தார்கள். அது புறவினத்தாரின் உறைவிடமானது. யாக்கோபு குலத்தின் மகிழ்ச்சி ஒழிந்து போனது. புல்லாங்குழல், வீணை ஒலி கேட்கப்படவேயில்லை.
46 எல்லாரும் சேர்ந்து யெருசலேமுக்கு எதிரில் இருந்த மாஸ்பாவுக்கு வந்தார்கள். ஏனென்றால், இஸ்ராயேலருக்கு முற்காலத்தில் செபக்கூடம் ஒன்று மாஸ்பாவில் இருந்தது.
47 அன்று அவர்கள் நோன்பு பிடித்து, தவச்சட்டை அணிந்து, தலை மீது சாம்பலைத் தூவித் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்கள்.
48 தங்கள் சிலைகளின் சாயல்களிலிருந்து புறவினத்தார் அறிந்துகொள்ள முயன்றதை@ மறை நூல்களைத் திறந்து கண்டு கொண்டார்கள் இவர்கள்.
49 குருக்கள் அணியும் ஆடையணிகளையும் முதற்பலன்களையும் மற்றக் காணிக்கைகளைக் கடவுள் கொண்டு வந்தார்கள். முதியவர்களைக் கடவுள் ஊழியத்தில் காலம் கழித்துச் செபிக்கும்படி தூண்டினார்கள்.
50 வானத்தை நோக்கி உரத்த சத்தமாய்க் கூவி: இவர்களை என்ன செய்வோம்? எவ்விடம் கூட்டிப் போவோம்?
51 உமது ஆலயம் தீட்டுப்பட்டுக் காலில் மிதிப்பட்டது. உம் குருக்கள் சிறுமையடைந்து துக்கத்தில் மூழ்கினார்கள்
52 எங்களை அழித்தொழிக்க இதோ புறவினத்தார் எதிர்த்து வந்துள்ளார்கள், அவர்கள் எங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களை நீர் அறிவீர்.
53 ஆண்டவரே, நீர் எங்களுக்கு உதவி புரியாவிடில், நாங்கள் அவர்களை எவ்விதம் எதிர்த்து நிற்க முடியும் என்று சொல்லி,
54 எக்காளங்களை உரத்து ஒலிக்கச் செய்தார்கள்.
55 அதன் பிறகு யூதாஸ் படைகளை நடத்தப் பற்பல நிலைகளில் தலைவர்களை நியமித்தார்.
56 வீடுகள் கட்டிக் கொண்டவர்களையும், கொடிமுந்திரி நட்டவர்களையும், அச்சத்தால் பீடிக்கப் பட்டவர்களையும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு வழக்கப்படி கட்டளையிட்டார்.
57 அதன் பிறகு படைகளை நடத்திச் சென்று எம்மாவுக்குத் தென்புறத்தில் அவர்கள் பாளையம் இறங்கினார்கள்.
58 அப்பொழுது யூதாஸ்: நம்மேல் படையெடுத்து நம்மையும் நமது மறையையும் அழிக்க வந்த பகைவர்களை எதிர்த்துச் சண்டை செய்ய, ஆயுதந்தாங்கித் துணிவு கொண்டு காலையில் தயாராய் இருங்கள்.
59 ஏனென்றால், நம் மக்களுக்கு வரும் கொடுமைகளையும், நமது மறைக்கு வரும் அழிவையும் பார்ப்பதை விட நாம் போரில் மடிவதே நலம்.
60 ஆனால், கடவுள் திருவுளம் எதுவோ அதுவே நிறைவேறட்டும், என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், யூதாஸ், கொண்டு, தங்கள், ஏற்பாடு, ஒன்று, திரளான, கடவுள், சண்டை, சென்று, ஏனென்றால், எதிர்த்து, தான், அவருடைய, படைகளை, பழைய, நமது, வந்தார்கள், தயாராய், பலர், அவர்களை, பெயர், நாம், மன்னன், மக்கபே, வரும், மக்களை, ஆகமம், லிசியாஸ், எப்பிராத், செய்ய, யெருசலேம், யூதேயா, குலத்தின், நாடு, கட்டளையிட்டான், அப்போது, திறந்து, கருவூலத்தில், செல்வம், நாட்டில், வந்த, ஆன்மிகம், வீரரையும், கொண்டார்கள், ஆலயம், புறவினத்தார், குருக்கள், பிறகு, நீர், சொல்லி, அழித்தொழிக்க, திருவிவிலியம், நாடெங்கும், பாளையம், இறங்கினார்கள், கண்டு, சேர்ந்து, வேண்டுமென்றும், அந்தியோக்கஸ், பெரும்படை, மேல், சென்றான், வலிமை, பின்தொடர்ந்தார், என்றாலும், எவ்விதம், உள்ள, தனக்கு, மகிழ்ச்சி, சேர்த்து, கண்ட, பகைவர், இஸ்ராயேல், சீரியா, போல், மாட்சி, அவன், என்றார், படைகளும், இருந்த, கடவுளின், மீதும், அவர்களுக்கு, செய்வோம், போர், மக்களின், நம்மையும், மக்களையும், காப்பாற்றப், எல்லாரும், சகோதரரும்