தக்காளி குழம்பு
தேவையானவை: நன்கு பழுத்த தக்காளி - 4, சின்னவெங்காயம் - அரை கப், பூண்டு - 10 பல், புளி - ஒருஎலுமிச்சை அளவு, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன்,சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.இதில் தக்காளி, மிளகாய்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள்.பூண்டு, வெங்காயம் தோலுரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக்காயவைத்து, தாளிக்கும் பொருட்களுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து கீறிய பச்சை மிளகாயைச்சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்குங்கள்.இந்தக் குழம்பை சாதத்தில் பிசைந்து சாப்பிட.. செம ர்ர்ர்ருசி!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி குழம்பு, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, டீஸ்பூன், சேர்த்து, பூண்டு, நன்கு, Recipies, சமையல் செய்முறை