முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான தக்காளி சமையல் » செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி
செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி

தேவையானவை: தக்காளிக்காய் - 200 கிராம், துவரம்பருப்பு -அரை கப், சின்ன வெங்காயம் - 8, பச்சைமிளகாய் - 4, புளி -நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா அரைடீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை -சிறிது.
செய்முறை: துவரம்பருப்புடன், மஞ்சள்தூளை சேர்த்து,(துவரம்பருப்பு கரையாமல்) 2 விசில் வரும் வரைவேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள், பச்சை மிளகாயை சிறியதுண்டுகளாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய்காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய்சேருங்கள். சிறிது வதங்கியதும் தக்காளிக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகுபுளிக்கரைசலை சேருங்கள். மிதமான தீயில் 5 நிமிடம் கொதித்ததும், பருப்பு, கறிவேப்பிலைசேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.குறிப்பு: தக்காளிக்காய்க்குப் பதில் தக்காளிப்பழம் சேர்த்தும் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, சேர்த்து, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை