தக்காளி அரைத்த குழம்பு
தேவையானவை: பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி -நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பட்டை- ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, எண்ணெய் - கால் கப். அரைக்க: தக்காளி - 4,மல்லித்தழை - ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 3. தனியே அரைக்க: கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,சீரகம் - அரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்தெடுங்கள். பூண்டு, வெங்காயத்தைதோலுரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய்தாளித்து, பூண்டு, வெங்காயத்தை சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.இது நன்கு வதங்கியதும் தக்காளி, மல்லித்தழை விழுது, சாம்பார் பொடி சேர்த்து 5 நிமிடம்கொதித்ததும் புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். இது பச்சை வாசனை போககொதித்தபின் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி அரைத்த குழம்பு, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, டீஸ்பூன், நன்கு, சேர்த்து, பூண்டு, Recipies, சமையல் செய்முறை