பாசிப்பருப்பு சொதி
தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், முதல் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், இரண்டாம்தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி - ஒரு துண்டு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு - தேவையான அளவு, பூண்டு - 6 பல். அரைக்க: பச்சை மிளகாய் - 4. தாளிக்க: பட்டை -1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப்பொடியாக நறுக்குங்கள். வெந்த பாசிப்பருப்புடன் இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்துவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து, விடாமல்கிளறி வேகவையுங்கள். வெங்காயம் நன்கு வெந்தததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து தாளித்துகொட்டி இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேருங்கள்.இட்லி, இடியாப்பம், சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாசிப்பருப்பு சொதி, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, சேர்த்து, கறிவேப்பிலை, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை