மரவள்ளிக்கிழங்கு உப்புமா

தேவையானவை: பெரிய மரவள்ளிக்கிழங்கு - 1, இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால்கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, தூள் உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி, சதுரத் துண்டுகளாக நறுக்கி நன்கு தண்ணீரில் அலசி எடுத்துஉப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை நீக்கி துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைநீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதில் பச்சைமிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பிறகு வேகவைத்த கிழங்கினையும் சேர்த்துகிழங்கு உடைந்து விடாமல் கிளறி தேங்காய் துருவல் தூவி கரண்டியின் காம்புப் பகுதி கொண்டு கிளறிஇறக்கவும். இது கேரளாவில் மிகவும் பிரசித்தமான ஒரு சிற்றுண்டியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்களுக்குஇது நல்ல சத்தான உணவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மரவள்ளிக்கிழங்கு உப்புமா, 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, டீஸ்பூன், துருவல், Recipies, சமையல் செய்முறை