உருளைக்கிழங்கு அல்வா
தேவையானவை: உருளைக்கிழங்கு பெரியதாக - 2, சர்க்கரை - அரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன்,குங்குமப்பூ - 1 சிட்டிகை, பாதாம் எசன்ஸ் - 5 சொட்டு.
செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, கட்டி இல்லாமல் கைகளால் பிசையவும்.சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொண்டு, கம்பிப்பாகாககாய்ச்சி, பிசைந்துள்ள கிழங்கையும் அதில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கெட்டியானதும் சிறிது, சிறிதாகநெய்யை சேர்த்து கிளறி, கடைசியில் சிறிது குங்குமப்பூ சேர்க்கவும். பின்னர் சிறிது ஆறியதும் பாதாம் எசன்ஸ்விட்டு கிளறவும். இது பாதாம் அல்வாவின் ருசியைக் கொடுக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளைக்கிழங்கு அல்வா, 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, சிறிது, பாதாம், Recipies, சமையல் செய்முறை