சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - 15, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: எண்ணெய் - 2 கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - கால்டீஸ்பூன்.
செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் தோலை நீக்கி, நீளவாட்டில் நான்காகநறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இந்தக் கிழங்குத் துண்டுகளை சிறிது சிறிதாக சேர்த்துஅரைவேக்காடாக பொரித்தெடுக்கவும். பின் எண்ணெயை வடித்துவிட்டு, வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, தாளிதங்களைப் போட்டு தாளித்து வறுத்த கிழங்கு, தூள் உப்பு, மிளகாய்தூள், கறிவேப்பிலை சேர்த்துமொறுமொறுப்பாக வேக வைத்து எடுக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேப்பங்கிழங்கு ரோஸ்ட், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை