பாசிப்பருப்பு பக்கோடா
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், தனியா - 2 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்,மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பருப்பை சற்றுக் கரகரப்பாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவிட்டு, சிறுசிறு உருண்டைகளாக வேகவிட்டு எடுங்கள்.இது வட இந்தியர்களின் ஃபேவரிட் பக்கோடா. இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை சட்னியும்,இனிப்பு சட்னியும் நல்ல சைட்-டிஷ்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாசிப்பருப்பு பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை