வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை: வேர்க்கடலைப் பருப்பு (வறுக்காதது) - 2 கப், கடலை மாவு - ஒன்றேகால் கப்,அரிசி மாவு - கால் கப், மிளகாய்தூள் - இரண்டரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்(அல்லது) இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையானஅளவு.
செய்முறை: வேர்க்கடலையுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் (அல்லது) இஞ்சி - பூண்டுவிழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டுஎடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேர்க்கடலை பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, டீஸ்பூன், மாவு, Recipies, சமையல் செய்முறை