உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையானவை: உருளைக்கிழங்கு (சற்று பெரியதாக) - 2 , கடலை மாவு - 1 கப், மைதா மாவு -1 டேபிள்ஸ்பூன், இட்லி மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, ஆப்பசோடா - அரை சிட்டிகை.
செய்முறை: கிழங்கை தோல் சீவி சற்று மெல்லிய வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாகமாவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். உருளை வில்லைகளை ஒவ்வொன்றாக மாவில் போட்டெடுத்து காயும்எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளைக்கிழங்கு பஜ்ஜி, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, மாவு, டேபிள்ஸ்பூன், Recipies, சமையல் செய்முறை