காய்கறி பஜ்ஜி

தேவையானவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு - 1டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன். காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும்சேர்க்கலாம்) - ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருட்களை ஒன்றாகப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அந்த எண்ணெயிலிருந்து, ஒரு குழி கரண்டி அளவுக்கு எடுத்து, மாவில் சேருங்கள். இட்லிமாவை விட சற்று கெட்டியாக கரையுங்கள். சிறிது சிறிதாக காயும் எண்னெயில் ஊற்றுங்கள். நன்குவெகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காய்கறி பஜ்ஜி, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, நறுக்கிய, பொடியாக, டேபிள்ஸ்பூன், மாவு, Recipies, சமையல் செய்முறை