வெங்காய பக்கோடா
தேவையானவை: கடலை மாவு - 1 கப், பெரிய வெங்காயம் - 4, சீரகம் - அரை டீஸ்பூன்,மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா - அரை சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாவுடன் சீரகம்,மிளகாய்தூள், உப்பு, ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரையுங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து,வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசறி, எண்ணெயை நன்கு காயவைத்து, சிறிதுசிறிதாக உதிர்த்துவிட்டு, பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெங்காய பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, உப்பு, Recipies, சமையல் செய்முறை