முந்திரி பக்கோடா
தேவையானவை: முந்திரிப்பருப்பு - 100 கிராம், கடலை மாவு - 1 கப், மிளகாய் தூள் - 1டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையானஅளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக, மீதி எல்லாப் பொருட்களையும் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். பிசறிய கலவையில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் உதிர்த்துவிடுங்கள். நடுத்தரத் தீயில் வேகவிடுங்கள். இல்லையெனில், முந்திரிப்பருப்பு கருகிவிடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முந்திரி பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, , Recipies, சமையல் செய்முறை