உபயோகம் - சிரிக்க-சிந்திக்க
பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு.
அப்போது நேரு, ''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.'' என்றார்.
உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து, ''இதோ, என் தலையைப் பாருங்கள்,'' என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார், ''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''
நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உபயோகம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, சிரிக்க, உபயோகம், நேரு, சிந்திக்க, அப்போது, நகைச்சுவை, சர்தார்ஜி, சீனா