கடி ஜோக்ஸ் 97 - கடி ஜோக்ஸ்

சோமு : நேத்திக்கு...நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுல கலந்துகிட்ட நம்ம தலைவர் வாய் தவறி...புலம்பி...மானத்தை வாங்கிட்டா ருய்யா... !!
ராமு : என்ன பேசினாரு....
சோமு :நமது அணி சில விஷயங்களில் வீக் ... ஆக இருந்தாலும்... ‘ டேட்டிங்கில் ’ வலுவாக உள்ளதுன்னு சொல்லி தொலைச்சுப்புட்டாறு....…!
-***-
ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.
ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.
-***-
ராமு : நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
சோமு : வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.
-***-
ராமு : "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"
சோமு : "எதுக்கு?"
ராமு : "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".
-***-
ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?
சோமு : ம் .. .. .. உங்க வீடா ?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 97 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, ", வீடு, பண்ண, நம்ம, நகைச்சுவை, சிரிப்புகள், kadi