கடி ஜோக்ஸ் 29 - கடி ஜோக்ஸ்

ஒருவர் : பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
மற்றொருவர் : நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.
-***-
பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
பாக்கி : ஏன்?
பாஸ்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
-***-
காதலன் : கலா நல்லவேளை! 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே!
காதலி : இல்லாட்டி ?
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்! ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே!
-***-
நண்பர் 1 : அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.
நண்பர் 2 : இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?
நண்பர் 1 : நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.
-***-
வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 29 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, கடன், அந்த, நண்பர், சரியா, சொல்லு, காதலன், பாஸ்கி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, தியேட்டரிலே, பாக்கி