கடி ஜோக்ஸ் 11 - கடி ஜோக்ஸ்
நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு சொல்றீங்களே,,,,, படத்துக்கு என்ன பெயர்
தயாரிப்பாளர் : "ராக்கெட்டு"
-***-
ஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
பீன்ஸ் : இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.
-***-
மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்
-***-
கோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?ஏன்னா...
பாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..
-***-
கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 11 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, கோபு, பாபு, பையன், மணமகன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், உங்க