சிரிக்கலாம் வாங்க 4 - சிரிக்கலாம் வாங்க
நீங்க எப்பவும் என்ன சோப்பு உபயோகிக்கிறீங்க ?
நான் எப்பவும் சோப்பு உபயோகிக்கரதில்லை, குளிக்கும் போது மட்டும் தான்.
-***-
சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
எப்படிச் சொல்றீங்க ?
ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
-***-
கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.
-***-
அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் !
அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.
-***-
(மேடையில் ஒரு அரசியல்வாதி)
நீலக் கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே..! அரசு யோசிக்குமா..?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 4 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, நான், அக்கவுண்ட்ல, சோப்பு, கொள்ளை, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், நீங்க, எப்பவும்