பல்லவர்கள்
பல்லவக் கட்டிடக் கலையின் இரண்டாவது நிலையில், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்டுள்ள ஒற்றைக் கல் ரதங்களையும் மண்டபங்களையும் கூறலாம். இந்த அற்புதமான கலைச் சின்னங்களை உருவாக்கிய பெருமை முதலாம் நரசிம்மவர்மனையே சாரும். பஞ்சபாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து வெவ்வேறு கோயில்
குடைவரைக் கோயில் |
அடுத்தபடியாக கட்டுமானக் கோயில்கள் எழுப்பப்பட்டன. தொடக்கத்தில் இவை மணற் பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டன. காஞ்சி கைலாசநாதர் ஆலயம், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் தொடக்கால கட்டுமானக் கோயில்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். பல்லவர் கலையின் சிறப்புக்கு சிகரமாகக் கருதப்படுவது காஞ்சி கைலாசநாதர் ஆலயமாகும்.
வைகுந்த பெருமாள் கோயில் |
கடற்கரைக் கோயில் |
நுண்கலைகள்
இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளையும் பல்லவர்கள் ஆதரித்தனர். மாமண்டூர் கல்வெட்டு இசைப் பண் குறித்து விளக்குகிறது. குடுமியான் மலை இசைக்கல்வெட்டு இசைப் பண்களையும், இசைக் கருவிகளையும் பற்றி குறிப்பிடுகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் இயற்றிய பாடல்கள் பண்ணோடு இசைக்கப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டன. நடனமும், நாடகமும் இக்காலத்தில் வளர்ச்சியடைந்தன. இக்கால சிற்பங்கள் நடனக் கலையின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்துகின்றன. சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தட்சிண சித்திரம் என்ற ஒவியக்கலை விளக்கநூல் தொகுக்கப்பட்டது. அவனுக்கு சித்திரக்காரப்புலி என்ற விருதுப் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லவர்கள் , பல்லவர்கள், வரலாறு, கோயில், ஆலயம், கலையின், இந்திய, சிற்பங்கள், முதலாம், மண்டபம், குடைவரைக், கட்டுமானக், இசைப், கைலாசநாதர், எடுத்துக், பெருமாள், சிற்பக், வைகுந்த, காஞ்சி, ஓவியங்கள், பல்லவர், கடற்கரைக், ரதங்கள், மாமண்டூர், கோயில்களை, மகேந்திரவர்மன், இந்தியா, கட்டிடக், மாமல்லபுரத்தில், அற்புதமான, கூறலாம், வடிக்கப்பட்டுள்ள, அழகான