பல்லவர்கள்
முதலாம் நரசிம்மவர்மனைத் தொடர்ந்து இரண்டாம் மகேந்திரவர்மனும், முதலாம் பரமேஸ்வரவர்மனும் ஆட்சிக்கு வந்தனர். அவர்களது ஆட்சிக் காலத்திலும் பல்லவ சாளுக்கிய மோதல்கள் தொடர்ந்தன. பின்னர் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றான். அவன் ராஜசிம்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவனது ஆட்சிக்காலம் போர்களற்ற அமைதிக் காலமாக விளங்கியது. கலை, கட்டிடக் கலையில் அவனது கவனம் திரும்பியது. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் ஆலயம் ஆகியன அவனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. கலை இலக்கியத்தையும் அவன் ஆதரித்துப் போற்றினான். புகழ்மிக்க வடமொழி அறிஞரான தண்டின் அவனது அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. சீனாவுக்கு அவன் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்தான். கடல் வாணிபம் அவனது ஆட்சிக் காலத்தில் செழித்தது. சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகமப்பிரியன் போன்ற விருதுகளையும் ராஜசிம்மன் சூட்டிக் கொண்டான்.
அடுத்து, இரண்டாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர்களது ஆட்சி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. சோழ அரசன் முதலாம் ஆதித்தன் கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை முறியடித்து காஞ்சிப் பகுதியைக் கைப்பற்றினான். அத்துடன் பல்லவ மரபு முடிவுக்கு வந்தது.
பல்லவர் ஆட்சி முறை
நரசிம்மவர்மன் II |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லவர்கள் , வரலாறு, பல்லவ, இரண்டாம், அவனது, முதலாம், பல்லவர்கள், ஆட்சிக், இந்திய, ராஜசிம்மன், காலத்தில், ஆட்சி, அவன், கிராம, நரசிம்மவர்மன், நிலங்களுக்கு, நிலக்கொடை, நீர்ப்பாசன, குறிப்பிடப்பட்டுள்ளன, அவர், கல்வெட்டுகளில், வரிகள், கோயில், ஆட்சிக்கு, இந்தியா, வந்தனர், அரசன், அரசு, நன்கு, அரசர்